பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 "ஆண்டு நின்றும் அரக்கன் அகழ்ந்து கொண்டு ஈண்டு வைத்தது இளவல் இயற்றிய நீண்ட சாலையொடு நிலைநின்றது; காண்டி ஐய, நின்மெய் உணர்கண்களால்' (சூடாமணிப் படலம் 24) இதனால் சீதையின் கற்பு உறுதி புலனாகும். 23. சீதையின் கற்பு கெடவில்லை என்பதற்கு வேறொரு சான்றும் கூறப்பட்டுள்ளது. அனுமன் யாரும் அறியாமல் இராவணன் மாளிகையுள் புகுந்து இராவணன் நிலையைக் கண்டபோது, அவன் மிகுந்த காம உணர் வுடையவனாகக் காணப்பட்டான். அவன் சீதையோடு உடலுறவு கொண்டிருந்தால் இத்தகைய காமவெறி இருக்க முடியாது. இதுவே, சீதை கற்பு கெடாமல் நன்னிலையில் உள்ளாள் என்பதற்கு ஒரு சான்றாகும். பாடல்: "இவன் நிலையும், புல்நிலைய காமத்தால் புலர்கின்ற நிலை; பூவை நல்நிலையில் உளள் என்னும் நலன் எனக்கு நல்குமால்' (ஊர்தேடு படலம்-222.) எனவே, சீதை கற்பு உறுதியினின்றும் பிறழாத பண்பினள் என்பது போதரும்,