பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139. பேராண்மைக்குக் கூராக மதிக்கப் பெறும்- என்னும் கருத்தில், "பேராண்மை என்ப தறுகண்; ஒன்றுற்றக்கால் ஊராண்மை மற்று அதன் எஃகு' (773) என்று தம் திருக்குறளில் கூறியுள்ளார். படையிழந்து தனித்து நின்ற இராவணனை நோக்கி, இராமன், இன்று போய் நாளை வா என்றது. இதுவேதான். இத்தகைய ஊராண்மைப் பண்பு அனுமனிடமும் இருந்தது. 1. அனுமன் கடல் மேல் தாவியபோது குறுக்கிட்ட மைந்நாக மலையை அடக்கினான். பின் அது மக்கள் உருவில் வந்து, விருந்து உண்டு செல்லுமாறு அனுமனை வேண்டியது. அதற்கு அனுமன், 'யான் வந்த காரியத்தை முடிக்காமல் உணவு அருந்தேன்; உன் அன்புக்கு மகிழ் கிறேன்; யான் இலங்கை சென்று வென்று மீண்டால் உனது விருந்தை உண்பேன்’ என அன்புரை வழங்கினான். (கடல் தாவு படலம்) 'வருந்தேன் அதுஎன் துணை வானவன் வைத்த காதல் அருந்தேன் இனியாதும், என்ஆசை நிரப்பி அல்லால்; பெருந்தேன் பிழிசாலும் நின் அன்பு பிணித்த போதே இருந்தேன், நுகர்ந்தேன், இதன்மேல் இனி . ஈவதென்னோ'- (49 "ஈண்டே கடிதேகி இலங்கை விலங்கல் எய்தி ஆண்டான் அடிமைத் தொழில் ஆற்றி, என் ஆற்றல் கொண்டே மீண்டால் நுகர்வென் நின் விருந்து என வேண்டி மெய்ம்மை பூண்டான் அவன் கண்புலம் பின்பட முன்பு போனான்" (51)