பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 'இறுங்கொடி நுசுப்போடு இனைந்தடி வருந்தி நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்து முதிராக் கிளவியின் முள்ளெயிறு இலங்க மதுரை மூதூர் யாதெனவினவ ஆறைங் காதம் அகல் நாட் டும்பர் நாறைங் கூந்தல் நனித்தென நக்கு' (38–43) என்பது பாடல் பகுதி. முப்பது காதம் எனப் பெரிய எண்ணால் சொல்லாமல், ஆறைங் காதம் எனச் சிறிய எண்களையே கோவலன் பயன்படுத்தினான். ஆறு ஐந்து முப்பது எனப் பெருக்கலாகப் பொருள் கொள்ளாமல், மதுரை இன்னும் ஆறு அல்லது ஐந்து காதத்தொலைவே உள்ளது என்பதாகவும் பொருள் கொள்ளலாம். சும்மா ஐந்தாறு (ஐந்து அல்லது ஆறு) கொடு' என்னும் உலக வழக்கு ஈண்டு நோக்கத்தக்கது வழியில் உள்ள சில ஊர் களைக் கடக்கும்போது, இதுவா மதுரை-இதுவா மதுரை என்று கேட்பது போல் 'மதுரை மூதூர் யாது’ என்று கேட்டதாகப் பொருள் கொண்டு மகிழலாம். கண்ணகியைப் போலவே, சீதையும் காடு பற்றி வினவியிருப்பது சுவையாயுள்ளது. சீதையின் நிலை: அனுமன் அடையாளங்கள் எல்லாம் கூறிப் பின்னர் இராமன் கொடுத்தனுப்பிய கணையாழியை (மோதிரத்தைச் ) சீதையிடம் தந்தான். அதைப் பெற்ற அவள் மகிழ்ச்சியால் பல மொழிகள் பகர்ந்தாள்: யான் என்னென்று கூறுவேன்: இறந்தவர்கள் பிறந்த பயனை எய்தினர் என்பேனோமறந்தவர் மீண்டும் உணர்ந்தனர் என்பேனோ-போன உயிர் மீண்டும் வந்து தொடர்ந்தது என்பேனோ-என்று வியக்கிறாள். இழந்த மணியை அரவு பெற்றது போலவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றது போலவும், .மலடி குழந்தை பெற்றது போலவும் மகிழ்கின்றாள்: