பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 சுமந்திரனை நோக்கி, கிளியும் பூவைப்பறவையும் சொன்னதைச் சொல் என்று எல்லாக் கவலைகளையும் மறந்து கேட்ட அவளது சிறு பிள்ளைமைத் தன்மையையும். நினைவு செய். இதோ அந்தப் பாடல்கள்: 'நடத்தல் அரிதாகும் நெறி; நாள்கள் சில; தாயர்க்கு அடுத்தபணி செய்திவண் இருத்தி என, அச் சொற்கு உடுத்த துகிலோடும் உயிர் உக்க உடலோடும் எடுத்த முனிவோடும் அயல் நின்றதும் இசைப்பாய்'(60): 'நீண்ட முடி வேந்தன் அருளேந்தி நிறை செல்வம் பூண்டதனை நீங்கி நெறி போதலுறு நாளின், ஆண்டநகர் ஆரையொடு வாயில் அகலாமுன் யாண்டையது கானென இசைத்ததும் இசைப்பாய்' (61), எள்ளரிய தேர்தரு சுமந்திரன்! இசைப்பாய் வள்ளல் மொழி வாசகம், மனத்துயர் மறந்தாள்; கிள்ளையொடு பூவைகள் கிளத்தல்கிள என்னும் பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி பெயர்த்தும்' (62). என்று இராமர் கூறியனுப்பினார் என அனுமன் கூறினான்: இங்கே, சிலப்பதிகாரச் செய்திஒன்று ஒப்பு நோக்கத்தக்கது. கோவலன் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்று கொண்டிருந்த போது, சிறிது தொலைவு சென்றதுமே, கண்ணகி, இடையும் அடியும் நோக வருந்திப் பெருமூச்சு விட்டு, முற்றாத மழலைச்சொல்லால், இன்னும் மதுரை எவ்வளவு தொலைவில் உள்ளது எனச் சிரித்தபடி கேட்க, கோவலன சிரித்தபடி, இன்னும் மதுரை வெகுதொலைவில் இல்லை-இன்னும் ஆறு ஐங்காதத் தொலைவிலேயே உள்ளது-மிகவும் அண்மையில் உள்ளது-என்று ஆறுதல். கூறினானாம்: (சிலம்பு நாடு காண்காதை)