பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 என்று கூறி, மேலும் அனுமனுக்கு நன்றி கூறுகிறாள்; அனுமனே! அம்மையாகவும் அப்பனாகவும் உள்ளவனே! இராமர் தூதராய் வந்து எனக்கு உயிர்தந்து, இம்மைப் பயனையும், மறுமைப் பயனும் யான் பெறச் செய்தாய். என் துன்பம் போக்கிய வள்ளலே! யான் களங்கம் இல்லாதவள் எனின் என் வாழ்த்து பலிக்கும். நீண்ட ஊழிக் காலத்தை ஒரு பகலாகக் கணக்கிட்டுக் கொள்ளும் பல ஆண்டு காலம்-பதினான்கு உலகங்கள் அழியினும்-நீ அழியாமல் இன்று போல என்றும் இருந்து வாழ்வாயாக! இதனினும் நன்றி பாராட்ட யான் செய்யும் கைம்மாறு யாது உளது? 'பாழிய பணைத்தோள் வீர! துணை இலேன் பரிவு தீர்த்த வாழிய வள்ளலே! யான் மறு இலா மனத்தேன் என்னின், ஊழி ஒர் பகலாய் ஒதும் யாண்டெலம் உலகம் ஏழும் ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்றென இருத்தி என்றாள்' (72) "இன்று போல் என்றும் வாழ்க’ என இக்காலத்தில் வாழ்த்துவது கம்பரிடமிருந்து பெற்ற கடனோ! சீதையின் வினா : உயர்குண அனுமனே! இராமர் தம்பியுடன் எங்கே உள்ளார்? உன்னை எவ்வாறு அன்பானகப் பெற்றார்? யான் இங்கே இருப்பதை யார் சொல்ல அறிந்தீர்கள்? என்று சீதை வினவினாள். அனுமன் விடை : மாயமானைத் தொடர்ந்து இராமர் செல்ல, மாய மானாகிய மாரீசனின் குரல் கேட்டு இலக்குமணன் அங்கு