பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 "திங்கள் வாள் நுதல் மடந்தையர் சேயரி கிடந்த அங்கயத் தடந் தாமரைக்கு அலரியோன் ஆகி, வெங்கண் வ்ானவர் தானவர் என்றிவர் விரியாய் பொங்கு கைகளாம் தாமரைக்கு இந்துவே போன்று.” - (49) இராவணனைக் கண்ட அனுமன் கருநாகத்தைக் கண்ட கருடன் போலப் பாய எண்ணினாம். 'இருந்த எண்திசைக் கிழவனை மாருதி எதிர்ந்தான் கருந்திண் நாகத்தை நோக்கிய கலுழனின் கனன்றான்' (30) வயலில் உள்ள பயிர்க்கு நீர் பாய்ச்சல் போல், அரக்கியர், காமப் பயிர்க்கு நீராக மது அருந்துகின்றனர்: 'வருந்திய கொழுநர் தம்பால் வரம்பின்றி வளர்ந்தகாம அருந்திய பயிர்க்கு நீர்போல் அருநறவு - அருந்துவாரை' (ஊர் தேடு படலம்-105) இதில், காமம் பயிராக உருவகிக்கப்பட்டுள்ளது. கணவரைப் பிரிந்த அரக்கியர், பூமேல் பூ வைத்தது போல், தம் காந்தள் மலர் போன்ற கையால் தாமரை மலர் போன்ற முகத்தை ஊன்றிப் பிடித்து வருந்துகின்றனராம்: "நலன் உறு கணவர் தம்மை நவை உறப் பிரிந்து, விம்மும் முலை உறு கலவை தீய, - முள் இலா முளரிச் செங்கேழ் மலர்மிசை மலர்பூத் தென்ன , மலர்க்கையால் வதனம் தாங்கி அலமரும் உயிரி னோடும் நெடி துயிர்த்து அயர்கின்றாரை' (111) 'மலர் மிசை மலர் பூத்தென்ன' என உவமை கூறியிருப் ய்தால், கையைக் காந்தள் மலராகக் கொண்டு, தாமரை