பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பளிங்குக் கரைப் பகுதிக்கும் தண்ணீருக்கும் வேறுபாடு தெரியவில்லை என்பதைக் கூறி, பின்பு, அறிஞர்களும் தாழ்ந்தவர்களுடன் சேர்ந்து விடின் வேறுபாடு தெரியாது என்னும் பொது உண்மை அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமன் இலங்கை நகரைச் சுற்றிப் பார்த்து, இந்த நகர் அழியும். யாராயிருப்பினும் இருவினை எல்லோர்க்கும் பொது, ஊழினும் வலிய தொன்றில்லை என எண்ணினான். 'புக்கு நின்று தன் புலன் கொள நோக்கினன்; பொரு அருந் திருவுள்ளம் நெக்கு நின்றனன்: நீங்கும் அந்தோ இந்ந நெடு நகர்த்திரு என்னா; எக்குலங்களின் யாவரே யாயினும் இருவினை எல்லோர்க்கும் ஒக்கும்; ஊழ்முறை அல்லது வலிய தொன்று இல்லென உணர்வுற்றான்” (203) ஊழ்முறை அல்லது வலிய தொன்று இல் என்னும் பொது உண்மை இப்பாடலில் இடம் பெற்றுள்ளது. அனுமன் சீதையின் கற்பின் தூய்மைக் கண்டு வியந்து அறத்திற்கு அழிவு இல்லை என்று கூறுகிறான். 'மாசுண்ட மணியனாள் வயங்கு வெங்கதிர்த் தேசுண்ட திங்களும் என்னத் தேய்ந்துளாள்; காசுண்ட கூந்தலாள் கற்பும் காதலும் ஏசுண்ட தில்லையால்; அறத்திற்ரு ஈறு உண்டோ' (காட்சிப் படலம்-64) அறத்திற்கு ஈறு (அழிவு) இல்லை என்னும் பொது உண்மை இப்பாடலில் கூறப்பட்டுள்ளது. அனுமன் மேலும் எண்ணுகிறான். இரவு பகலாகத் தேவர்கள் அரக்கர்கட்குச் சேவகம் புரிகின்றனர். அது அரக்கர்களின் செல்வமோ? சீதையைச் சிறைவைத்திருப்பது