பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245 பதவுரை:- துகைத்தலின் = (அனுமன் பல மரங்: களை) வீசி எறிந்ததால், தடம்=பெரிய, தாமரைப் பொய்கை = தாமரைத் தடாகங்கள், செஞ்சந்தனம்= சிவந்த சந்தனச் சாந்தை, தாம் அரைத்தன ஒத்த = தாம் அரைத்துக் கரைத்துக் கொண்டன போல் காணப்பட்டன. கா=சோலைகள், காமரம் = காமரம் என்னும் பண்பாடு கின்ற, களி=மதுவுண்டு களித்த, வண்டொடும்= வண்டு களோடும், கள்ளொடும் - தேன் கூட்டொடும் சேர்ந்து, மரக்கடல் = மரக்கலம் மிதக்கும் கடலை, பூக்கடல் கண்ட = மலர்க் கடலாகச் செய்தன. அடுத்த பாடல்: "சிந்து வாரம் திசைதொறும் சென்றன, சிந்து வாரம் புரைதிரை சேர்ந்தன; தந்து வாரம் புதவொடு தாள் அற, தந்து வாரம் துகள்படச் சாய்ந்தவே'- (34). இப்பாடலில், சிந்து வாரம்' என்பது முதல் இரண்டடி களின் தொடக்கத்திலும், தந்து வாரம்' என்பது ஈற்று இரண்டடிகளின் தொடக்கத்திலும் மடங்கி வந்துள்ளன. இதனைப் பின்வருமாறு பிரித்துக் கொள்ளல் வேண்டும்: 'சிந்து வாரம் திசைதொறும் சென்றன, சிந்து வார் அம்புரை திரை சேர்ந்தன; தந்து வாரம் புதவொடு தாள் அற. தம் துவாரம் துகள் படச் சாய்ந்தவே” கருத்துரை : நொச்சி மரங்கள் சில, திசைகள் தோறும் சென்று கடல் அலைகளை அடைந்தன; சில மரங்கள், மனைகளின் வாயில் கதவுகளும் தாழ்ப்பாள்களும் துளைப் பகுதிகளும் துளாகும்படி வந்து வீழ்ந்தன. பதவுரை : சிந்து வாரம் = (சில) நொச்சி மரங்கள், திசை தொறும் சென்றன= எல்லாப் பக்கங்களிலும் சென்றன, (சில மரங்கள்) சிந்து = கடலின், வார் = நீண்ட, அம் - அழகிய, புரை = உயர்ந்து எழுதலையுடைய, திரை