பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பதவுரை:- வண்டு அலம்பு=வண்டுகள் ஒலிக்கின்ற, நல் ஆற்றின்=நல்ல வழியிலே-பாதையிலே உள்ள, மரா மரம் = மராமரங்கள், வண்டல் = வண்டல் படிந்த, அம்= அழகிய, புனல் = நீரையுடைய, ஆற்றில் மடிந்தன= ஆற்றிலே(நதியிலே) வீழ்ந்தன நீள்மரம்=சில நீண்ட மரங்கள், விண்டு அலம்பு=விண்ணிலே பாய்கிற, கம்= தண்ணிர், நீங்கிய = சிதறி விலகும்படி, விண்தலம் புக = வானத்திடை செல்ல, வெண்புனல் = வெண்மையான (ஆகாயம்) கங்கையில், வீழ்ந்தன = விழுந்தன. நீங்கிய என்பது இங்கே செய்யிய' என்னும் வாய்பாட்டு வினை யெச்சமாகும். அடுத்து: “தாமரைத் தடம் பொய்கை, செஞ்சந்தனம் தாமரைத்தன ஒத்த, துகைத்தலின், காமரக்களி வண்டொடும் கள்ளொடும் காமரக் கடல், பூக்கடல் கண்டவே' (33) இப்பாடலின் தொடக்கத்தில், தாமரைத்த' என்பது முதல் இரண்டடிகளிலும், காமரக்க' என்பது பின் இரண்டடிகளிலும் மடங்கியுள்ளன. இதனைப் பின்வருமாறு .பிரித்துக் கொள்ள வேண்டும். “தாமரைத் தடம் பொய்கை, செஞ்சந்தனம் தாம் அரைத்தன ஒத்த; துகைத்தலின், காமரக்களி வண்டொடும் கள் .ெ ாடும் காமரக் கடல் பூக்கடல் கண்டவே' - கருத்துரை: அனுமன் பலவகை மரங்களை அங்கும் இங்கும் வீசியதால், பெரிய தாமரைத் தடாகங்கள் சிவந்த சந்தனத்தை அரைத்துக் கரைத்து வைத்தாற்போல் தோன்றின. சோலைகள் காமரம் என்னும் பண்பாடும் வண்டுகளோடும் தேனோடும் மரக்கலம் மிதக்கும் கடலில் கலந்து, தண்ணிர்க் கடலைப் பூக்கடலாகச் செய்தன.