பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 இதுபாடல். தேன், சாந்தம்,மான்மதம், மலர்கள் முதலியன நீரில் கலத்தலால், கடலும் மீன்களும் புதுமணம் கமழ்கின் றனவாம். இராவணனுக்கு அஞ்சி ஞாயிறு விலகிச் செல்வதாகக் கூறுவர் பலர். அப்படியில்லை அது மாட மாளிகைகளின் ஒளியைப் பார்க்க முடியாமல் கண் கூசியே ஞாயிறு விலகிச் செல்கிறது என்பதை அவர் அறியார்: 'முன்னம் யாவரும் இராவணன் முனியும் என்று எண்ணிப் பொன்னின் மாநகர் மீச்செலான் கதிர் எனப் புகல்வார்; கன்னி ஆரையின் ஒளியினில் கண் வழுக்குறுதல் உன்னி நாள் தொறும் விலங்கினன் போதலை உணரார்' (19) இது பாடல். மகளிர் எழுப்பிய அகில் புகையில் முகில் கூட் டங்கள் மறைந்து விட்டனவாம். எல்லா இடங்களிலும் களிக்கின்றவர்களைத் தவிர, கவலைப்படுபவர் ஒருவரும் இல்லையாம். இலங்கை, மடந்தையரின் வாய்களால் பவளக்காடாக வும், கண்களால் குவளைப் பொய்கையாகவும், முகங்களால் தாமரைத் தடாகமாகவும் தோன்றிற்றாம். "விளரிச் சொல்லியர் வாயினால் வேலையுள் மிடைந்த பவளக் காடெனப் பொலிந்தது; படை நெடுங் கண்ணால் குவளைக் கோட்டகம் கடுத்தது; குளிர் முகக் குழுவால் முளரிக் காணமும் ஒத்தது முழங்கு நீர் இலங்கை' (37)