பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வரலாற்றுக் குறிப்புகள் சுந்தர காண்டத்தில் உள்ள வரலாற்றுக் குறிப்புகள் சிலவற்றைக் காண்பாம். - இலங்கையிலிருந்து திரும்பி வரும்போது விருந்து அருந்துவதாக மைந்நாகத்திடம் அனுமன் சொன்னபோது அன்புடையார் சிறப்பைக் கூறினானாம். - 'முன்பில் சிறந்தார், இடை உள்ளவர், காதல் முற்றப் பின்பில் சிறந்தார் குணம் நன்று” - (கடல் தாவு படலம்-50) என்னும் பகுதிக்கு முதல் வள்ளல்கள், இடை வள்ளல்கள், கடை வள்ளல்கள் ஆகியவரைக் குறிப்பதாகச் சிலர் பொருள் கூறுகின்றனர். தமிழ் நாட்டு மூன்று ஏழு வள்ளல் களைக் குறிப்பதாயின், மிகவும் முற்பட்ட காலத்தவனாகிய அனுழன் பிற்காலத்துத் தமிழக வள்ளல்களைக் குறிப்பிட் டிருக்க முடியாதாதலின் அது பொருளன்று. அனுமனை வழிமறித்த அங்கார தாரகை என்னும் அரக்கி, திருமாலோடு போர் புரியப் பாற்கடல் மேல் போன மது என்னும் அரக்கனையும் அவன் தம்பி கைடவனையும் போன்றாளாம்: வேதக் கொழுஞ்சுடரை நாடி நெடுமேல் நாள் ஒதத்தின் ஒடும் மதுகைடவரை ஒத்தாள்' (கடல் தாவு படலம்-64)