பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பிறரை ஏய்த்துப் பிழைப்பவனைத் திமிங்கிலம் என்று சுட்டித் திட்டுவது உலக வழக்கம். இன்னும் பெரிய அளவில் ஊரை அடித்து உலையில் போடுபவனைத், திமிங்கிலகிலம்" என்று சொல்ல வேண்டும் எனத் திவாகர நூல் நமக்குத் தருவது போல் இல்லையா? மக்கள் இந்தத் திமிங்கில கிலத்தைக் கூடப் பேச்சு வழக்கில் குறிப்பிடுவது போல் தெரிகிறது. "ஐயோ! அவனா? அவன் பெரிய திமிங்கலம் ஆயிற்றே" என்று மக்கள் கூறுகின்றனரே- அந்தப் பெரிய திமிங்கிலம் என்பது திமிங்கிகிலத்தைதானோ? இருக்கலாம்! 钰 இந்தக் காலத்தில் Biology' என்று கூறப்படும் உயிர் நூல் அந்தக் காலத்திலேயே உண்டு என்பதற்குச் சேந்திவாகரம் சான்றாகும். இந்த உயிர் நூலைத்தான், கம்பர், தேசமும் நூலும் சொல்லும் திமிங்கிலகிலம்’ என்னும் தொடரில் குறிப்பிட்டுள்ளார் போலும்! கல்வியில் பெரியவர் கம்பராயிற்றே! . இலங்கையில் மகளிர், குழலிசை- வீணையிசையாழிசை தோற்கும்படி கிளிகட்கு மழலை மொழி பேசக் கற்றுக் கொடுக்கின்றார்களாம்: "குழலும் வீணையும் யாழும் என்று இனையன குழைய, மழலை மென் மொழி கிளிக்கிருந்து அளிக்கின்ற மகளிர்” - (ஊர்தேடு படலம்-6} குழலும் யாழும் தமிழ் நரட்டுக்கு இசைக் கருவிகள். வீணை வட நாட்டது. கம்பர் காலத்திற்கு முன்பே வீணை தமிழகத்தில் இறக்குமதியாகிவிட்டது என்பது புலனா கிறது. - 'இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்' என மாணிக்க வாசகர் தம் திருவாசகத்தில் (திருப்பள்ளி