பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 என்றால் உயிர்ச்சுமை-உயிர்ச்சுமைதாங்கி-என்பது பொருளாம். கண்ணில்லார்க்கு உயிர் ஒரு சுமையாம். அதாவது, அவர்கள் உயிர் இல்லாதார் போன்றவர்களாம் வீணே உயிரைச் சுமந்து கொண்டு வருந்துகிறார்களாம். இங்கே, கம்பர் கண்ணில்லாரின் இரங்கத் தக்க எளிய நிலையை நன்கு புனைவு செய்துள்ளார்-உயிரற்ற அஃறினைப்போல் கூறியுள்ளார். "பெரிய கடலைச் சிறிய உருவால் எவ்வாறு கடந்தாய்? தவத்தின் வலிமையாலோ-அல்லது ஏதாவது சித்தியி னாலோ' என்று சீதை அனுமனை வினவினாள்: 'இத்துணைச் சிறியதோர் ஏணில் யாக்கையை; தத்தினை கடல்; அது தவத்தின் ஆயதோ? சித்தியின் இயன்றதோ? செப்புவாய் என்றாள்' (98) அந்தக் காலத்திலேயே, சித்துத் திருவிளையாடலில் நம்பிக்கை இருந்துள்ளமையும் சித்தர்கள் இருந்தமையும் இதனால் புலனாகலாம். - அனுமன் சீதையிடம் வானரப் படையின் மிகுதியைக் கூறுகிறான். அரக்கர் படை, வானரர் படைக்கு உறை -யிடவும் காணமுடியாது-என்கிறான். 'இராமன்கை அம்பின் உதவும் படைத்தலைவர் அவரை நோக்கின், இவ் வரக்கர் வம்பின் முலையாய்! உறையிடவும் போதார்; கணக்கு வரம்பு உண்டோ? (117) என்பது பாடல் பகுதி. உறையிடுதல்' என்பது எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஒர் அரிய சொல்லாட்சி. பேரெல்லையை அளக்கப் பயன்படுத்தும் ஓர் அடையாளக் குறிக்கு உறை என்பது பெயராகும். இதற்குச் சிறு விளக்கம் வேண்டும்; நூறாயிரம் பொருள்களை எண்ணிக் கணக்கிடுபவர், ஆயிரம் ஆயிரம் ஆக எண்ணி ஒவ்வோர் ஆயிரத்தையும் தனியாக வைப்பர். முதல் ஆயிரம் எண்ணி