பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 முகம் எப்போதும் ஒரே இயல்பினதாயிருத்தலின், அதற்குத் திங்களை எவ்வாறு உவமிக்க முடியும்? 'அண்ணல் தன் திருமுகம் கமலமாம் எனின், கண்ணினுக்கு உவமை வேறு யாது காட்டுகேன்? தண்மதி யாமென உரைக்கத் தக்கதோ, விண்ணுடல் பொலிந்து அதுமெலிந்து தேயுமால்?'(51) வாய்க்குப் பவளவாய், எனப் பவளத்தை ஒப்புமை யாகக் கூறுவர்? ஆனால், பவளம் புன்முறுவல் பூக்காதே! 'மூரல் வெண் முறுவல் பூவாப் பவளமோ - மொழியற் பாற்றே” (52). பற்களுக்கு உவமையாகக் கூடியன, வரிசையான முத்துக்களோ? நிலாத் துண்டுகளின் வரிசையோ? அமிழ்த்தத் துளிகளின் தொகுப்போ? அறம் முளைத்த, விதைகளோ? முல்லையரும்புகளின் நிரலோ? வேறு யாதோ? 'முத்தம் கொல்லோ? முழுநிலவின் முறியின் திறனோ? முறை அமுதச் சொத்தின் துள்ளி வெள்ளியினம் தொடுத்த கொல்லோ? துறை அறத்தின் * வித்து முளைத்த அங்குரங்கொல் வேறேசிலகொல்? மெய்ம் முகிழ்த்த தொத்தின் தொகைகொல் யாதென்று பல்லுக்கு உவமை சொல்லுகேன்?” (53). இங்கே அறத்தின் விதைகளோ என்றது, பற்கள் முப்பத்திரண்டு இருப்பதைப் போல, அறங்களும் முப்பத். திரண்டாம் ஆதலின் என்க. இது ஒரு புதுமை! ஆற்று மணலின்-கடல் மணலின் எண்ணிக்கையினும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துதல்.மரபு. இங்கே, நீண்ட ஒர் ஊழிக்காலத்தை ஒரு நாளாய்க் கணக்கிட்டுக் கொள்ளும் பற்பல ஆண்டுகள் வாழ்க எனவும், பதினான்கு,