பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 இராவணன் கயிலையை எடுத்த போது, சிவன் அடி, விரல் நுனியால் மலையை அழித்தினானாம். விரல் நுனியைச் சேவடிக் கொழுந்து (118) என்கிறார் கம்பர். இராவணன் சீதையை நோக்கி, நீ இணங்காவிடின் விரைவில் கொன்று விடுவேன் என்பதை அறிவிக்கு முகத் தான், குறைந்த நாளோய் (அற்ப ஆயுள் உடையவளே) (145) என விளிக்கின்றான். (உருக்காட்டுப் படலம்) அனுமன் இராமன் தான் தன்னை அனுப்பினான் என்பதை மெய்ப்பிக்க இராமனின் உடல் உறுப்புகளின் இயல்பை விளக்குகிறான். கழுத்துக்கு எல்லாரும் கடலி லிருந்து எடுத்த சங்கையும் கமுகையும் உவமிப்பர், ஆனால் (இராமராகிய) திருமாலிடத்தும் சங்கு இருப்பதால் நாங்கள் அந்தச் சங்கை உவமிப்போமே தவிர கடல் சங்கை உவமிக்க மாட்டோம் என்கிறான். 'கடல்படு பணிலமும் கன்னிப் பூகமும் மிடற்றினுக்கு உவமை என்று உரைக்கும் வெள்ளியோர்க்கு உடன்பட ஒண்னுமோ? உரகப்பள்ளியான் இடத்துறை சங்கம் ஒன்று இருக்க எங்ங்னம்?' (50) கடல் சங்கை உவமிப்பவர் வெள்ளியோராம்-அறிவுத் திறமை இல்லாதவராம். இராமனது திருமுகத்திற்குச் சிலர் தாமரையை உவமிக் கலாம் சரி, முகத்திற்குத் தாமரையை உவமித்துவிடின் தன் கண்ணுக்கு எதை உவமிப்பது? தாமரையை அவன் கண்ணுக்கல்லவா உவமிக்க வேண்டும்? செந்தாமரை கண்ணன்-கமலக் கண்ணன் என்பன அவன் பெயர்களா யிற்றே! சரி, முகத்திற்குத் தாமரை உவமிக்க முடியா தெனின், திங்களை (சந்திரனை) உவமிக்கலாமே என்றால், சந்திரன் மெலிந்து தேயக் கூடியவனாயிற்றே. இராமன்