பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 விண்வெளியில் ஞாயிறும் திங்களுமே மிக்க ஒளி உடையன வாகக் கண்ணுக்குத் தெரிவதால் மாச்சுடர் மண்டலம் இரண்டு என்றார் கம்பர். இலக்கிய ஒப்பு காண்டல் என்னும் முறையில் வேறு சில நூல்களிலும் இத்தகைய உருவம் கூறப்பட்டிருப்பதைக் காண்போம். புகார் (காவிரிப் பூம்பட்டினம்) என்னும் மடந்தை, மாலையில் ஒரு பக்கம் வெண் தோடும் இன்னொரு பக்கம் பொன் தோடும் அணிந்திருந்தாற்போல், அந்நகரின் கீழ்பால் முழுத்திங்களும் மேல்பால் ஞாயிறும் மாலையில்ஒரே நேரத்தில் விளங்கின-எனச் சாத்தனார் மணிமேகலை நூலில் கூறியுள்ளார்: 'புலவரை யிறந்த புகாரெனும் பூங்கொடி குணதிசை மருங்கில் நாள்முதிர் மதியமும் குடதிசை மருங்கில் சென்று வீழ் கதிரும் வெள்ளி வெண்தோட்டோடுபொன் தோடாக' (மணி மேகலா தெய்வம் வந்து தோன்றிய கதை(109, 119. 121) என்பது பாடல் பகுதி. பரிபாடலிலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. திருமாலின் இரண்டு கைகளிலும் உள்ள ஆழியும் (சக்கரமும்) வளையும் (சங்கும்) விண்ணில் உள்ள ஞாயிறும் திங்களும் போல் விளங்குகின்றன-என்று கூறப்பட்டுள்ளது : 'பருவம் வாய்த்தலின் இருவிசும் பணிந்த இருவேறு மண்டிலத் திலக்கம் போல நேமியும் வளையும் ஏந்திய கையால்' (பரிபாடல்-13; 7-9) என்பது பாடல் பகுதி. சிலப்பதிகாரத்திலும் இவ்வாறு முகிலானது ஒரு பக்கம் ஞாயிறும் மற்றொரு பக்கம்