பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சூறாவளி

என்பது நிறுவப்படுகிறது - உறுதியாகிறது. அப்படியெனில் என் கருத்துகள் புதிய அணுகு முறை உடையன என்பதும் நிறுவப்படுகிறது.


என் கருத்துகள் திட்டமிட்டுப் புதிய அணுகு முறையுடன் எழுதப்பட்டுள்ளன என்பதற்குச் சான்றாக, நூல் வெளியீட்டு விழா நடப்பதற்கு முன்னமேயே, சென்னைத் தமிழ் அறிஞர் உயர்திரு அ. பூபதி என்பவர் எனக்கு எழுதிய மடலிலிருந்து இரண்டு தொடர்களை மட்டும் தருகிறேன்.


"சுந்தர காண்டச் சுரங்கம் என்னும் தங்கள் நூலை நல்ல பல கண்ணோட்டங்களில் ஆய்வு செய்திருக்கிறீர்கள். தங்கள் முயற்சி பாராட்டுக்குரியதே"


இதுபோல் பல பாராட்டுகள் உள்ளன. ஒரு முறை - இருமுறை படித்துவிட்டு, அவ்வப்போது எடுத்து இடையிடையே படிப்பதும் உண்டு - என்று சொன்னவர்களும் உண்டு.


அழகிய மயில் நடனம் ஆடுவதை ஒரு காவியப் புலவன் கண்டால், இனிய - நயமான கவிதை படைப்பான்; ஓர் ஓவியப் புலவன் கண்டால், கண்கொள்ளாக் காட்சியாக மகிழ்விக்கும் ஓவியம் தீட்டுவான்; வேட்டையாடும் வில்லேந்திய ஒரு வேடன் கண்டால் ... . ?

சிறப்புச் செய்திகள் - கருத்து வெளியீட்டில் புதுமை - கம்பர் கண்ட சிவமும் முருகும் - என்னும் தலைப்புகளை மதிப்புரையாளர் இன்னொரு முறை படித்துப் பார்க்கின், புதிய அணுகுமுறையில் யான் இவற்றை அமைத்திருக்கிறேன் என்று உணரலாம். ஊனக் கண்ணோடு அகக் கண்ணாலும் காணவேண்டும்.