பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24

பயன்கள்:


என் கருத்துகள் பயனற்றவை என்று மட்ட மதிப்புரையாளர் குறிப்பிட்டுள்ளாரே - எனது நூலைக் கற்றால் என்னென்ன பயன்கள் கிடைக்க வேண்டும் என இவர் எதிர்பார்க்கிறார் என்பது தெரியவில்லையே.


என் நூலைக் கற்றால் பணம், பதவி, பதவி உயர்வு, சம்பள உயர்வு, பல்வேறு உரிமங்கள் (பர்மிட்-லைசென்சு), மாடு கன்று, வீடு வாசல், நகைநட்டு, துணிமணி, தோப்பு துரவு, காணி பூமி, வண்டி வாகனம், மற்றும் பல்வகைச் செல்வங்கள் கிடைக்க வேண்டுமா என்ன?


என் நூலைக் கற்றால் கிடைக்கக் கூடிய சில பயன்களைச் சுருக்கமாக அறிவிக்கிறேன். முதலில் இலக்கிய இன்பம் - இலக்கியச் சுவை பெற முடிகிறது. பல திருக்குறள்களை எடுத்தாண்டிருப்பதால், அவற்றால் உணர்த்தப்படும் நன்னெறிகளை அறிய முடிகிறது - (பின்பற்றவும் செய்யலாம்). திருடர்களின் கொடுமை கிண்டல் செய்து கண்டிக்கப்படுகிறது. இதனால் திருட்டு கூடாது என உணர முடிகிறது. கம்பருக்குச் சமயக் காழ்ப்பு இல்லை என்று கூறியிருப்பதன் வாயிலாக, சைவ - வைணவ வேறுபாட்டுக் காழ்ப்பு கூடாது என அறிய முடிகிறது. பெண்களின் மார்பகத்தைப் பெரிதாகக் காட்டிப் பொருள் ஈட்டும் இழிதகைமை கண்டிக்கப்பட்டுள்ளது. சீதையின் பண்பு விளக்கம், அனுமனின் பண்பு விளக்கம் ஆகிய தலைப்புகளின் வாயிலாக, மக்கள் பின்பற்ற வேண்டிய உயர்ந்த நெறிமுறைகள் உணர்த்தப்பட்டுள்ளன. 'வேற்றுப் பொருள் வைப்பு அணி' என்னும் பகுதியின் வாயிலாக, அறநெறியைப் பின்பற்ற வேண்டும் என்னும் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்படியே சொல்லிக்கொண்டு போனால்