பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



26சுந்தரகாண்டச்

திற்கு உரிய) நோபல் பரிசு பெற வேண்டும் என்று நான் இறைவனை இறைஞ்சுகிறேன். அந்தத் தகுதி இந்த நூலுக்கு உண்டு - இவண் சிவ. கண்ணப்பா - 2-3-1988. என்பது அந்தப் பகுதி. மற்றும், மாதிரிக்காக, தினமணியில் 'எனது தமிழ் அகராதிக் கலை' என்னும் நூலுக்கு உயர்திரு என்.டி. சுகி சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள மதிப் புரையை, ஒர் எழுத்துக்கூட விடாமல் அதில் உள்ளவாறு அப்படியே கீழே தருகிறேன்: சுந்தர சண்முகனார் நூல்களின் மதிப்புரைகள் "தமிழ் அகராதிக்கலை" தினமணிமதிப்புரை (21-4-1972). (ஆசிரியர்: புலவர் சுந்தர சண்முகனார், சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிமிடெட், சென்னை-1. விலை பத்து ரூபாய்) - (இரண்டாம் பதிப்பு).

தமிழில் வெளிவந்துள்ள அகராதிகள் தமிழ் - தமிழ் அகராதி, தமிழ் ஆங்கிலம், தமிழ் - ருஷ்ய, தமிழ் - மலாய், தமிழ் - இந்தி, தமிழ் - சிங்களம், தமிழ் - சமஸ்கிருதம், தமிழ் - இலத்தீன், தமிழ் - பிரஞ்சு ... ... என்பதாக எத்தனை மொழித் தொடர்புடைய அகராதிகள் தமிழுக்குள் வந்துள்ளன என்பதை இந்நூலில் படிக்கும்போது, தமிழின் பெருமை நமக்கு இன்னொரு படி உயர்வாகத் தெரிகிறது.

இந்த நூல், அகராதிகள் பற்றிய கலைக்களஞ்சியம்; தனி மனிதரின் உழைப்புக் களஞ்சியம். இந்நூல் தமிழ்ப் புலவருக்கும் தமிழ்ப் புரவலருக்கும் - பண்டிதருக்கும் பாமரருக்கும் பயன்படும் வகையில், எளிமையாகவும்