பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27

இனிமையாகவும் ஆங்காங்கு நகைச்சுவை மிளிரவும் எழுதிய நூல் நடைக்கு ஆசிரியரைத் தனிப்படப் பாராட்ட வேண்டும்.


அகராதியின் அமைப்பு, அதன் பயன், அதனால் பயன் அடையும் இலக்கியம் - இலக்கணம் - மக்கள் சமுதாயப் பழக்க வழக்கங்கள் - ஆராய்ச்சித் திறமையோடு எழுதப்பட்ட நூல் இது. சுவையுடன் எழுதியிருப்பதால் என்றுமே வீட்டிலே வைத்துப் பாதுகாக்க வேண்டிய நூல். பொழுது போக்காகவும் ஆழ்ந்தும் படிக்கும்போது தனிச்சுவை கொப்புளிக்கிறது. ஆழ உழுவாரும் அகல உழுவாரும் ஒவ்வொரு படி விலைக்கு வாங்கிப் பயன் பெறலாம்.


நிகண்டு கற்றவர்கள் சொல்லின் பொருளுக்குத் தடுமாற வேண்டியதில்லை. கிங்காங் - தாராசிங் போன்ற வல்லவர்களாக உலவலாம் என்று ஆசிரியரே கூறுகிறார். இந்த நூலின் உள்ளுறையைக் கற்ற பிறகு நமது உடலே விம்மிப் புடைக்கிறது; உள்ளம் நெகிழ்கிறது; ஆத்மா தமிழ் மூச்சு விடுகிறது. எத்தனை எத்தனை நிகண்டுகள் - எத்தனை எத்தனைத் துறைக்குரிய நிகண்டுகள்; எப்பாடுபட்டுத் தொகுத்துத் தந்துள்ள செம்மொழியின் காவலர்களாய் நாம் பிறந்தோம் என்னும் எண்ணம் மேலோங்குகிறது. பதினேழாம் நூற்றாண்டுத் தொடக்கம் - தமிழில் நூற்றுக்கணக்கான அகராதிகள் தமிழ்ச் சொற்களின் கதையைச் சொல்லுகின்றன. தமிழைச் செல்வந்தர்களின் மொழி என்றும், தமிழ் நிகண்டுகள் அகராதிகள் இவற்றைப்பார்த்து இதனைப் பணக்கார மொழி என்றும் கூறலாம். தமிழ்மொழி நிகண்டுகள் - அகராதிகள் அத்துணைச் செல்வங்களின் கருவூலங்கள்.


தமிழ்ப்புலவர்கள், எழுத்தாளர்கள், பி. எச். டி. ஆராய்ச்சியாளர்கள், மருத்துவப் பகுதியாளர் ஆகிய