பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



28

எல்லாச் சொல் வணிகர்களும், இந்த நூலாசிரியரின் புத்தம் புது உழைப்புத் திறனுக்குக் கடப்பாடுடையவர்கள்.

தமிழ்மீது ஆராய்ச்சி செய்த புலவர் பெருமக்களுக்குள் சொற்களஞ்சியமான அகராதி தொகுப்புப் பற்றி ஆழ்ந்து எழுதிய இந்நூலாசிரியர் தனித்தன்மை பெற்று நிற்கிறார். சிறப்பான தமிழ் நூல்களைக் கவனத்துடன் வெளியிடும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தையும் பாராட்ட வேண்டும். அபூர்வமான தமிழ் நூல்களுள் இதுவும் ஒன்றல்லவோ! வார்ப்புரு:Right என்.டி. சுகி சுப்பிரமணியன்.

மற்றும், தமிழ் அகராதிக்கலை நூல் பற்றிச் சுதேச மித்திரன் நாளேட்டில் (ஜூலை 18, 19-1966) வந்த மதிப்புரையிலிருந்து ஒரு சிறு பகுதி வருமாறு: ஆராய்ச்சி அடிப்படையில் படைக்கப்பட்டுள்ள இவ்வரிய நூல் புத்தம் புதிய தொரு நல் முயற்சியாகும். தமிழகம் இவ்வரிய ஆராய்ச்சி நூலை வரவேற்றுத் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளும் என்று நம்புவோமாக. அடுத்து, தமிழ் அகராதிக் கலைநூல் பற்றி Indian Express (5-2-72) என்னும் ஆங்கில நாளேட்டில் வந்துள்ள மதிப்புரையிலிருந்து ஒரு பகுதி:-

“This book is the first of its kind, which traces the history of Lexicography in Tamil, beginning from Tolkappiam to the most modern dictionaries of different kinds. This is a complete survey of the various dictionaries ranging from the old Nikandus to the latest glossaries of technical and administrative terms, dictionaries of Proverbs and those giving foreign equivalents to Tamil words ... ...