பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

சுந்தரகாண்டச்

மனைவி - நண்பர். 211-கண்ணீர்ச் சிரிப்பு - அழுகைச் சிரிப்பு. 212, 213 - கறுப்புண்ட மனத்தன் = தொல்காப்பிய விளக்கம். 213 இரத்தக் கண்ணீர். 215 - விறல் - சத்துவம். 216, 217 - உவமைக் கலை - விளக்கம். 227, 228-கம்பரின் வழுவும் வழுவமைதியும், 232- வேற்றுப் பொருள் வைப்பணி - தண்டியலங்கார விளக்கம். 238- தற்குறிப்பேற்ற அணி - தண்டியலங்கார விளக்கம், 241 242 - மடக்கு அணி - தண்டியலங்கார விளக்கம். 247 - ஒப்புவினை புணர்ப்பு (சமாதி) அணி - தண்டியலங்கார விளக்கம் - இன்ன பிற.

இவ்வாறு குறைந்தது நூறு இடங்களிலாவது என் சொந்தத் தலையீடு இருக்கும். இவ்வளவு விளக்கங்களுள் ஒன்று கூட, மதிப்புரையாளரின் இரங்கத் தக்க (பரிதாபமான) மூளையில் ஏறவில்லையே என்பது மிகவும் வியப்பிற்கும் வேதனைக்கும் உரியது.

பன்னாடை வேண்டியதை விட்டுவிட்டு வேண்டாததை வைத்துக் கொள்ளுமாம். என் நூலில் வேண்டாதது ஒன்றுமில்லை. யான் ஐம்பது ஆண்டு காலமாக ஈட்டி வைத்துள்ள புகழ் இந்த மட்டமான மதிப்புரையால் கொலை செய்யப்பட்டுள்ளது. தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியலில் உள்ள,

"உறுப்பறை குடிகோள் அலை கொலை என்ற
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே"(10)

என்னும் நூற்பாவில் உள்ள 'கொலை' என்பதற்குப் பேராசிரியர் என்னும் பழைய உரையாசிரியர்,

"கொலை யென்பது, அறிவும் புகழும் முதலாயினவற்றைக் கொன்றுரைத்தல்" -

எனப் பொருள் வரைந்துள்ளார். புகழ்க் கொலையாளரால் எனது புகழும் கொலை செய்யப்பட்டிருக்கிறது. மூளைக் கட்டிப் பிணியாளனாகிய யான், மயக்கத்திற்கும் தலை