பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38

சு. ச.வே உரிய இடத்திற்கு அழைத்துச் சென்று பொருள் உதவிக்கு ஏற்பாடு செய்தார். விழாவின்போது மூளைக் கட்டிப் பிணியால் சு. ச. சாவுப்படுக்கையில் கிடந்தபோது முன்வந்த யாரும் வந்து பார்க்கவில்லை. பச்சையப்பன் கல்லூரி டாக்டர் இராமச்சந்திரன் போன்றோர் வந்து பார்த்தார்கள்.


1990-சு. ச. எழுதிய - பெரிய அளவில் (டெம்மிசைசு) 824 பக்கங்கள் கொண்ட 'தமிழ் நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்' என்னும் நூலின் பதிப்பாசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன் பதிப்புரையில் எழுதியிருப்பதிலிருந்து ஒரு பகுதி வருக:


"இந்நூலாசிரியர் திரு. சுந்தர சண்முகனார் புதுவைக்குப் புகழ் சேர்க்கும் பெரும்புலவர். ஆராய்ச்சிப் பேரறிஞர். பன்னூல் ஆசிரியர். ஆய்வு நூல்கள் பல எழுதிப் பேரும் புகழும் பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழகத் தொகுப்பியல் கலைத்துறைப் பேராசிரியராகத் திகழ்ந்த பெருமையர். அகராதிக்கலை, கெடிலக்கரை நாகரிகம், தமிழ் இலத்தின் பாலம், தமிழ்நூல் தொகுப்புக்களஞ்சியம் போன்ற பெரு நூல்கள் படைத்த பெரும் புலவர். அறிவுத்திறனும் சிந்தனைத் திறனும் எழுத்துத் திறனும் வாய்ந்த இவர் நூல்கள் தமிழுக்கு அணிகலன்கள் அல்ல - படைக்கலன்கள்! ஆராய்ச்சியாளர்க்கு அமையவேண்டிய அனைத்துப் பண்புகளும் அமையப்பெற்ற திரு. சுந்தர சண்முகனார் நம் காலத்தில் வாழ்வது நமக்குப் பெருமை. அறிவு நலம்சான்ற பெரு நூல்களைப் படைப்பது இவருக்குக் கைவந்த கலை..." இப்படி இன்னும் எவ்வளவோ உண்டு.


1983-சேலம் தமிழ்ச் சங்கத்தில், திருச்சிப் பேராசிரியர் உயர்திரு ரம்போலா மாஸ்கரனேசு சு. ச. வினிடம் கூறியது: