பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சூறாவளி

"உங்களுக்குப் புதுச்சேரிக்கு வெளியே நிரம்ப ரசிகர்கள் உள்ளனர்".


25-5-1990-தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் - மாமன்னன் இராசராசன் பரிசளிப்பு விழா அரங்கில், சென்னை இராணி மேரி கல்லூரிப் பேராசிரியை திருமதி கனகசுந்தரம் சு. ச. வினிடம் கூறியது: "உங்கள் தமிழ் அகராதிக்கலை போன்ற தமிழ்மொழி பற்றிய அரிய ஆராய்ச்சி நூலை இனி எழுத முடியாது".


26-5-1990- தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நூல் வெளியீட்டு விழாவின்போது, தகைமிகு துணைவேந்தர் சி. பாலசுப்பிரமணியம் வரவேற்புரை ஆற்றிய போது சு. ச. பற்றிக் கூறியது: "புதுச்சேரியில் சு. ச. பல ஆராய்ச்சி நூல்கள் எழுதித் தமிழ் வளர்க்கிறார்",

கம்பராமாயணச் சொற்பொழிவுகள்:

கம்பராமாயணம் தொடர்பாக யான் எழுதிய சுந்தரகாண்டச் சுரங்கம் என்னும் நூலைப் பலர் பாராட்டினர்சிலர் இருமுறை படித்தனர் என்று முன்னர்க் கூறப்பட்டுள்ளது. என் கம்பராமாயணச் சொற்பொழிவுகளால் யான் பெற்ற சிறப்புகளையும் இவண் அறிவிக்கிறேன்:


கம்ப ராமாயணம் பண்டிதர்களின் கைகளிலேயே இருந்தது - இப்பொழுதுதான் அது பாமரர்க்கும் எட்டத் தொடங்கியுள்ளது என்று கூறிச் சிலர் பண்டிதர்கட்கு ஒரு வகைச் 'சான்றிதழ்' வழங்கி வருகின்றனர்.


ஒரு தோற்றம் ஐம்பது ஆண்டுகளாக, யான் கம்ப ராமாயணம் பாமரர்கட்கும் கிடைக்கும்படிச் செய்து வருகிறேன் - பல ஊர்களில் பண்டித மணி, திரு.வி.க. முதலியோர் தலைமையில் யான் கம்ப ராமாயணச் சொற்