பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



5

not convey much by way of worthwhile ideas; nor is there any evidence of any new approach. வரலாற்றுக் குறிப்புகள்: (என் பதில்கள்) வரலாற்றுக் குறிப்புகள் என்னும் தலைப்பில் புராண வரலாற்றுச் செய்திகள் சில அறிவிக்கப்பட்டுள்ளன. வரலாற்றுச் (History) செய்திகள் ஒன்றும் இல்லை என்பதாக மட்டமான மதிப்புரையாளர் எழுதியுள்ளார். '"பல புராண வரலாறுகள் சுந்தர காண்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன" - என யான் எழுதியிருப்பது அவருடைய கண்ணுக்குப் புலப்படவில்லை போலும்! கம்பருக்கும் வால்மீகிக்கும் உள்ள வேறுபாடுகளுள் ஒன்றைப் பின்வருமாறு சுட்டிக்காட்டியுள்ளேன்: வால்மீகி இராமாயணத்தின் வழி நூலே கம்ப ராமாயணம் எனினும், கம்பர் வால்மீகியினும் சிற்சில வேறுபாடுகள் கொண்டுள்ளார். வால்மீகி அடிப்படையையே ஆட்டங் காணச் செய்துள்ளார். கம்பர் அதனைச் சரி செய்துள்ளார். அதாவது - வால்மீகி இராமனையும் சீதையையும் மக்களாகவே கொண்டுள்ளார். கம்பரோ, இருவரையும் திருமால் - திருமகள் ஆகியோரின் தெய்வப் பிறவிகளாகக் கொண்டுள்ளார்; அதற்கேற்பக் கதையமைத்துக் கொண்டு போகிறார். ஒன்றேஒன்று பார்ப்போமே! இராவணன் சீதையை, உடலைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போனதாக வால்மீகி வம்பு செய்துள்ளார்; கம்பரோ, சீதை இருந்த குடிலை அகழ்ந்து, சீதையைத் தீண்டாமல் குடிலோடு துரக்கிக் கொண்டு சென்றதாகக் கூறித் தமிழ் கற்றவர்களை ஏமாற்றியுள்ளார்' - என்பது யான் எழுதியுள்ள பகுதி. இங்கேயும் மட்டமான மதிப்புரை