பக்கம்:சுமைதாங்கி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. சுமைதாங்கி

நீரில்லை எனில்உனவும் இல்லை; உண்டி

நிறையவில்லை என்ருலோ உடம்பும் இல்லை. தேரில்லா மன்னவரே இல்லை; அன்னர்

செலவழிக்க வில்லையெனில் கோவில் இல்லை. பேரில்லா மானுடரும் இல்லை; ஏனுே

பேரெடுக்க அனைவராலும் முடிவ தில்லை? வேரில்லா வேறுமரம் இல்லை; என்னை . வெட்டவெளிச் சாலையோரம் கட்டு வைத்தார்!

கால்கடுக்க நிற்கின்றேன் தினமும்; என்ன

கடுங்காவல் தண்டனையா? யார்கொடுத்தார்: நூல்களிலே சொன்னபடி கொடிய வர்க்கும்

நுங்கைப்போல் குளிர்உள்ளம் காட்டு கின்றேன். கால்கடுக்கச் சுமையோடு வருவார் தம்மைக் .

கண்டிரங்கி நானதனே வாங்கிக் கொள்வேன். பால்கொடாத மாடுகளும் அரிப்பெடுத்தால்

பாங்குடனே என்மீதில் உராய்ந்து செல்லும்!

தலைக்கணத்தை இறக்கிடுவேன்; நன்றி.கொல்லும்

சமுதாயம் நினைக்கிறதா? இறுமாப் பென்னும் தலைக்கணத்தை இறக்குவதார்? சுடுமண் என்று

சாற்றிடுவோம் செங்கல்லைக்; கருங்கல் லாக நிலைக்கதவு போன்றுள்ளேன். எனினும் பாகாய்

நெக்குருகும் நெஞ்சுடையேன்! இந்நாள் என்னேக் கலைக்கண்ணுல் எங்கேயோ சிற்றுார் தன்னில்

கானுங்கால் உமதுள்ளம் களிப்பு கூரும்!

1 سهمی

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/10&oldid=692087" இலிருந்து மீள்விக்கப்பட்டது