பக்கம்:சுமைதாங்கி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யிள்ளே

தென்பொதியை, தண்பொருகை; சந்த னத்தின் சீர்த்தியெலாம் ஒருசேரக் குழைத்து வந்தே இன்பூட்டும் நறுந்தென்றல்-இவற்ருல் என்றும்

ஈடில்லாப் புகழ்கொண்ட நெல்லை தன்னில் மன்னுடிகழ்க் காந்திமதி நாதர்க் குற்ற

மகளுகப் பிறந்திட்ட கா சு ப் பிள்ளை என்தமிழர் போற்றுகின்ற அன்புக் கிள்ளை;

இனியதமிழ் அன்னைக்கோ ஏற்ற பிள்ளை !

சட்டத்தின் நுணுக்கமெல்லாம் கற்றுத் தேர்ந்த

சட்டப்பே ரறிஞரிவர்! கவிஞர் தாகூர்ச் சட்டவிரி வுரையாளர்!’ போட்டி தன்னில்

தக்கபெரு வெற்றியினைப் பெற்ற தாலே, சட்டத்திற் கொருபிள்ளே யானுர்; முந்தைத்

தமிழகத்தில் அவர் சட்டாம் பிள்ளை யார்ை. சட்டத்தைத் தாய்த்தமிழில் தெளிவாய்ச் சொல்லல் சாலுமென மெய்ப்பித்த செம்மல் அன்னர்!

செந்தமிழை ஆய்வார்க்கும், சிவஞா னத்தைத்

தெளிவுறவே உய்த்துணர விரும்பு வார்க்கும், கந்தமிழில் நூல்பலவே நயந்த எரித்தார்!

நாளும்நாம் ஏத்துமாறு துறைகள் தோறும் சிந்தைவளர் கலநூல்கள் செய்த ளித்தார்;

தித்திக்கும் கவிதைகளும் ஆக்கித் தந்தார்! பைந்தமிழைத் தனித்தமிழைப் போற்றி வாழ்ந்த பண்பாளர் பிள்ளைபுகழ் என்றும் கிற்கும்!

107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/116&oldid=692193" இலிருந்து மீள்விக்கப்பட்டது