பக்கம்:சுமைதாங்கி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்

கடல்நீர்தான் உப்பாகக் கரிப்ப தற்குக்

காரணத்தைக் கவலையுடன் கூறும் போதில் "கடல்கடந்த தமிழ்மக்கள் இற்றை நாளில்

கரைகாணுத் துயர்மூழ்கி வடிக்கும் கண்ணிர் கடல்நீரில் கலந்ததனுல்!” என்ருர் அண்ணு!

கற்பனைதான் எனினுமதிற் பொதிந்தி ருக்கும் குடல்நடுக்கும் நிலைமையினைச் சிந்திப் போர்க்குக்

கொடுமைதனைக் களைகின்ற முனைப்பு தோன்றும்!

அலேகடலைக் குறியாக்கிக் கதையும் சொல்லி, அழகாக மனக்குமுறல் காட்டி, நாட்டின் ரிலையதனைத் தெளிவாக்கித், தமிழ கத்தின் கிலேயுயரப் புகழோங்கத் தன்னை யீந்த தலைமகர்ை-தமிழினத்தை வாழ வைத்த

தக்கேரில் பேரறிஞர். முதல்வர் அண்ணு நிலையான புகழ்கொண்டார் தமிழர் நெஞ்சில்,

கிடுதுயில் கொள்கின்றர் கடலோரத்தே

கத்துகின்ற தரங்கத்துப் பாடல் கேட்கும் காவியத்து நாயகரை.எவரும் கத்தும் வித்தகரை-யாரிடத்தும் பகைகொள் ளாத

மேலான திருத்தகையை-அவர்க்கு வாய்த்த சத்தான பொன்னுடலே-அவர்தாள் தொட்டுத் தணியாத காதலுடன் தழுவி இன்ப முத்தமிடக் கடற்பெண்ணுள் துடிக்கின் ருளே,

முத்தமிழின் சுவைகாணத் துடிக்கின் ருளோ?

85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/94&oldid=692171" இலிருந்து மீள்விக்கப்பட்டது