பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார்; அது மூலத்தை விடச் சிறப்பானது என்கிறார். போதலேர் எழுதியுள்ள உரைப்பாக்கள்(Splaen de Paris) ஐம்பது இருக்கும். அவை எதுகையோ, இசையொழுங்கோ இல்லாமல் எழுதப்பட்டவை; உள்ளத்தின் உணர்ச்சிகளுக்கேற்ற ஒசையொழுங் கும், தன்னை மறந்த சிந்தனையின் அலைவீச்சும் கொண்டவை; யாரும் எளிதில் பின்பற்ற முடியாதபடி கலை நுணுக்கமும், வேலைப் பாடும் மிக்கவை; உரைப்பாக்கள் வரலாற்றில் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவை; சில பண்புகளில் ஒப்பற்றவை; இலக்கியச் சோதனை முயற்சியில் பாராட்டத்தக்க அரிய வெற்றி. திலாக் ரிக்ஸ் என்ற ஒவியர் பற்றியும், தாமியர், மானெட், ஃப்ளாபர்ட், வேக்னர் என்ற எழுத்தாளர்கள் பற்றியும் அவர் எழுதியுள்ள கட்டுரைகள், திறனாய்வுக் கலை வளர்ச்சி பெறாத காலத்தில் எழுதப்பட்டவை. அக்கட்டுரைகளைப் பெரும் இலக்கியச் சாதனையாகப் பிற்கால அறிஞர்கள் பாராட்டியுள்ளனர். அமெரிக்க எழுத்தாளர் ஆலன் போவின் கதைகளைப் போதலேர் பிரெஞ்சில் மொழி பெயர்த்திருக்கிறார். மூலத்தின் சிறப்புக் குன்றாமலும், மூலத்தை விடச் சிறந்த கலையம்சத்துடனும் அது செய்யப்பட்டிருப்பதாக எல்லாரும் குறிப்பிடுகின்றனர். அமெரிக்க மக்களிடையே இந்த மொழி பெயர்ப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 1865 ஆம் ஆண்டில் தமது படைப்புக்கள் பற்றித் தம் தாயிடம் குறிப்பிடும் போது என் படைப்பின் அளவு சிறியதாக இருக்கலாம்; ஆனால் அச் சிறிய படைப்பு, என் துயரம் மிக்க கடின.உழைப்பின் வெளிப்பாடு என்று கூறியிருக்கிறார். 1920-ஆம் ஆண்டில் ஆந்திரே கைட் என்ற அறிஞர் போதலேரைப் பற்றிப் பத்திரிகையில் குறிப்பிடும் போது அவருடைய ஒவ்வொரு முயற்சியும், அவர் ஆன்மாவின் பரிதவிப்பாகவும், ஒப்பற்ற போராட்டமாகவும் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். படித்தவர் உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற்கும்படி, எட்கார் ஆலன்போவைப் பற்றிப் போதலேர் உணர்ச்சி பூர்வமாக ஒரு கருத்தை வெளியிட்டார். இன்று நம் மகிழ்ச்சிக்கு ஊற்றாக இருப்பது (அவர் படைப்பு) எதுவோ, அதுவே அவரைக் கொன்றுவிட்டது” என்றார். அந்தக் கருத்து போதலேருக்கும் பொருந்தும். I05