பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுக்கவிதைக்கு இசையமைக்க முடியுமா? -அப்துல்ரகுமானுடன் ஒரு பேட்டி ராஜகுமாரன் கவிஞர் அப்துல் ரகுமானை நேரில் கண்ட போது நான் மனதில் உருவகப்படுத்தி வைத்திருந்ததில் இருந்து மாறுபட்டு இருந்தார். புதுக்கவிதைகளுடன் ஐந்தாண்டுகளுக்குமேல் தொடர்பு இருந்தாலும், புதுக்கவிதைக்கு அணி செய்த கவிஞர்களின் பெயர்களை உறவினர்கள் போல் எத்தனையோமுறை நினைத்தும் பேசியும் வந்தபோதிலும், ஒரு புதுக்கவிஞரை நான் நேருக்கு நேர் சந்திப்பது இதுதான் முதல் தடவை. புதுக்கவிஞர்களை அவர்களுடைய கவிதைகளைப் போலவே இளமையானவர்களாய் மனம் கற்பனை செய்து வைத்திருந்ததற்கு மாறாக கவிஞர் அப்துல் ரகுமான் ஒரு தமிழ்ப் பேராசிரியராய், வயதில் மூத்தவராய் இருந்தார். நிதானமான பேச்சு அறிவில், அனுபவத்தில் நிறைகுடம் என்பது கொஞ்ச நேரம் அவருடன் பேசியதுமே புரிந்து போகிறது. கவிஞர் களும் கலைஞர்களும் காட்டிக் கொள்ளும் பந்தாக்கள் எதுவும் இல்லை. அதற்காக இவரா இத்தனை சாதனைகளைப் படைத்தார் என்றும் எண்ணிவிட முடியாதவாறு பேராசிரியத்தன்மை எப்போதும் இவரை தொடர்ந்து கொண்டுள்ளது. கவிஞர் அப்துல் ரகுமான் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் படித்துப்பட்டம் பெற்றவர். கவிஞர் மீரா இவரது கல்லூரி நண்பர். கவிஞர் அப்துல் ரகுமான் வாணியம்பாடியில் உள்ள கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். கவியரங்குகளில் இவர் காலடி எடுத்து வைத்த பிறகு தான் அவை புது உருவம் பெற்றன. ஆரம்பத்தில் இவர் மரபுக் கவிதைதான் எழுதி I3?