பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உதாரணமாகப் பூவை எடுத்துக் கொண்டால் பல்வேறு பூக்கள் இருக்கின்றன. ரோஜா, மல்லிகை, முல்லை என்று இருக்கிறது. ஆனால் பூ என்பதற்கு ஒரு மூலமாதிரி இருக்கிறது. அதனால்தான் இந்த வேறுபாடு தெரிகிறது. பூக்களின் எல்லாத் தன்மைகளும் அடங்கிய ஒன்று இருக்க வேண்டும். அது போன்ற முழுமையான (ஐடியல்) உலகம் என்று சுவீடன்பர்க் கூறுகிறார். இந்தத் தத்துவம் இக்கவிஞர்களை மிகவும் ஈர்க்கிறது. அதை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இதைச் சொல்வதற்கு மரபு அவர்களுக்கு இடம் கொடுக்க வில்லை. இதற்காக ஃபிரீவெர்ஸ் என்ற வடிவத்தை அவர்கள் கையாளுகிறார்கள். இது உருவான பிறகு மலார்மே என்ற மாபெரும் கவிஞர் தோன்றுகிறான். அவன்தான் இந்தக் குறியீட்டு இயக்கத்தை செறிவுபடைத்ததாக ஆக்கி மிக உயர்ந்த இடத்துக்குக் கொண்டு போகிறார். பிறகு பால் வெலரி, வெர்லேன் வருகிறார்கள். இவர்கள் நால்வரும் குறியீட்டு இயக்கத்தைச் சேர்ந்த பெருங்கவிஞர்கள். இவர்கள்தான் புதுக்கவிதையைத் தொடங்கி வைத்தவர்கள். இதற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். இசைதான் மிகவும் குறியீட்டு ஆற்றலைக்கொண்டது என்பது அவர்கள் கருத்து. அது உண்மையும் கூட. - ஏனென்றால் இசை சொற்கள் இல்லாதது. இசை ஒரு மனிதனைக் கிளர்ச்சி அடையச் செய்யும் அளவுக்கு வேறு எதுவும் செய்ய முடியாது. இந்த நிலையைக் கவிதை எட்ட வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். மொழியில் ஏற்கெனவே அர்த்தம் இருப்பதாய் குறிப்பாகச் சொல்ல முடியவில்லை. எளிய இசையை நோக்கிப்போக விரும்பி னார்கள். இசையை நோக்கிப் போக வேண்டுமானால் கவிதையில் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட சந்தங்களாக இருப்பது தடங்கலாக இருக்கிறது. இதையெல்லாம் காரணமாக வைத்துதான் ஃபிரீவெர்சுக்குச் (சுதந்திரக் கவிதை) செல்கிறார்கள். 135