பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரமசாரிகளுக்காக கட்டப்படும் வீடுகளில் சமையல் அறை இருப்பதில்லை. மற்ற எல்லா வசதிகளும் இருக்கும். சமையல் அறைகளும் கூடங்களும் இருந்தால்தான் வீடு, மற்றது எல்லாம் வீடு இல்லை என்று சொல்ல முடியுமா? ஒவ்வொன்றும் அதன் அளவில் வீடுதான். அதற்கென்று தனி இலக்கணம் இருக்கிறது. அதே மாதிரி தான் புதுக்கவிதையம். அதற்கென்று வடிவம் இருக்கிறது. வரையறை இருக்கிறது. ராஜ: வால்ட் விட்மன்தான் புதுக்கவிதையின் தந்தை என்று கூறுகிறார்களே.... ரகுமான்: அது தவறான கருத்து. அமெரிக்காவில் எடகர் ஆலன்போ என்ற ஒரு பெரும் எழுத்தாளர் இருந்தார். இலக்கியத்தில் பல துறைகளில் முன்னோடி அவர் துப்பறியும் கதையை முதன் முதலில் எழுதியவர் அவர்தான். ஒருமுறை அவர் ரேவன் என்ற ஒரு கவிதையை எழுதினார். . கவிதை இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டு குறியீட்டுமுறையில் அந்தக் கவிதை அமைந்திருந்தது. அந்தக் கவிதையை எப்படி எழுதினேன் என்று எட்கர் ஆலன்போ ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்த கவிதையை விட அந்தக் கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. அக்கட்டுரையைப் படித்த போதெலேர் என்ற பிரஞ்சு எழுத்தாளர் அந்த கட்டுரையில் மனதைப் பறிகொடுத்தார். போதெலேர் அதை பிரஞ்சில் மொழி பெயர்த்து வெளியிட்டாா. அந்த பாணியில் பிரஞ்சில் எழுத ஆரம்பித்தார். இரண்டு விசயங்கள் இதில் இணைகிறது. - . ஒன்று பாணி. சிம்பல் எனப்படும் குறியீட்டை வைத்து எழுதும் பாணி. இதற்கு முன்பு, சுவீடன்பர்க் ஒரு பெரிய தத்துவஞானி, ஒரு தத்துவத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த உலகத்தில் இருக்கும் எல்லாப் பொருள்களுமே ஒரு மூல மாதிரியிலிருந்து உருவானவை ான்பது தான் அவரது தத்துவம். எல்லாப் பொருள்களுக்குமே ஒர் அழகான மூல மாதிரி இருக்கிறது என்ற சுவீடன்பர்க்கின் இந்தத் தத்துவம் ஏற்கனவே பரவி இருக்கிறது. . H.34