பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பருத்தியை விளைவிக்கப் பாடுபடுகின்றனர் உழுகின்றனர், விதைக்கின்றனர்,அறுவடையும்செய்கின்றனர் பருத்தி முதிர்ந்ததும் பணி முடிகிறது முதலாளி வந்து மொத்தத்தை எடுத்ததும் எங்களுக்குரியது ஏதும் இல்லையே! பல்லாண்டு கடந்தாலும் பட்டினியில் தள்ளப்பட்டு பரிதவிக்கும் நாங்கள் பருத்தியை விளைவிக்க வயலுக்குள் விரட்டப்பட்ட நீக்ரோக்கள் கூட்டம். பதை பதைக்கும் வெயிலில் பருத்தியை விளைவித்துப் பஞ்சப் பராரியாய் பட்டினியில் வாடும் ஏழை நீக்ரோக்களின் நிலையறிந்து கண்ணிர் சிந்துகின்றான் ஹியூஸ். பகட்டான பட்டாடை அணியும் முதலாளி ஒரு பக்கம். ஒரு முழத்துணியில்லாமல் கையது கொண்டு மெய்யது போர்த்திக்-கண்ணிர் விடும் ஏழைகள் ஒரு பக்கம். ஹியூஸின் நெஞ்சு விம்மி வெடித்ததால் வேதனைக் கவிதை பிறக்கிறது. ஏழை மக்களைச் சுரண்டுகின்ற பணக்கார வர்க்கத்தை ஒரு கை பார்க்கின்றான் கவிஞன். பணமுதலையைப் பார்த்துக் கொக்கரிக் கின்றான் கவிஞன். உறுதியாக, நீ யாரென எனக்குத் தெரியும் நீ, ஒரு வெள்ளையன் நான், ஒரு நீக்ரோ நீ நல்ல பணிகளை உனக்கென்று எடுத்துக்கொண்டாய் குப்பைத் தொட்டியை, சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்யும் நாற்றமெடுக்கும் பணிகளை எங்களுக்குக் கொடுத்துள்ளாய் நீ கடற்கரை மாளிகையில் -- உல்லாச வாழ்க்கை நடத்துகிறாய் எங்களுக்குச் சேரியில், சந்துபொந்துகளில் குடியிருப்புக் கொடுத்துள்ளாய். உன்னுடைய பெயர் மு...த....லா...வி.யா? ஹா! நீ என்றுமே வெள்ளையன் தானா? I45