பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்வதற்கென்று ஒன்று சொல்லுதல் யார்க்கும் எளிது சொல்லாதிருத்தலும் எளிது அபி Δ மிச்சம் உறவுக்கு வர்ணங்கள் பூச முயன்றேன் - பின்பு ஒன்றுமே செய்யாமல் விட்டு விட்டேன் நினைவுகளைத் தரம் பிரிக்கச் சித்தங் கொண்டேன் - அதில் தெளிவொன்றும் தோன்றாமல் செய்கை மறந்தேன் விழிப்பிற்கும் துயிலுக்கும் இடையில் நொந்தேன் வரும் உறக்கத்தில் நானும் சில கனவுகள் நெய்தேன் கனவுகள் அறுந்து விழக் கண்கள் விழித்தேன் காலத்தின் எரிச்சல் மட்டும் கண்ணில் மிச்சம். - தி. சந்தானம் Δ நட்சத்திரங்களைக் Ꮌ ITöTöᏈ☽ ❍) கடற்கரை மணலில் உன்மடி மீது தலைவைத்துப் படுத்திருந்த போது, என் கண்களில் தெரிந்தது, வானம் அல்ல, எதிர் காலம். உன் மயக்கும் கண்களும் சிரிக்கும் இதழ்களும் விளைத்த கனவுகள் எங்கோ போயின. என்னை உன்னிடத்தில், பிடித்துத் தள்ளிய மாயக் கவர்ச்சி மறைந்து போனது காதலோடு களிப்புற்று வாழ வேலை முக்கியம் சோறும். உன்மடி மீது தலைவைத்துப் படுத்திருந்தபோது, என் கண்களில் தெரிந்தது, வானம் தான். நட்சத்திரங்களைத் தான் c5; fi gösts GỒ GR} , புதிய ஜீவா. Δ I53