பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஏம் பாவத்துல போக எனக்குத்துட்டி கொண்டாடிட்டிகளா என்ன அநியாயம் பாருங்க. இன்னொரு பொண்ணு தேடி அலையிரேன். ஒருத்தியும் எனக்கு வாக்கப்பட மாட்டிங்காளே. வருத்தம்.... வருத்தத்துல திரியரேன், பேரப்புள்ள.... x. முகத்தில் அமுத்தலான சிரிப்புடன் பொம்பளைகளைப் பார்த்தார். கள்ளச் சிரிப்பு. எக்கண்டம். எகடாசி. கெழட்டு எளவுக்கு பொண்ணு கேக்காமே. வெட்கம் புடுங்கித் தின்ன பொம்பளைகள் வீட்டைப் பார்த்து ஓடினார்கள். வெங்கிடு உடம்பை நெளித்துக்கொண்டு கொஞ்சினார். சாவன்னா நீரு. கூடுன ஆளு. ஆனா.... காட்டை போட்டுட்டு. பிச்சை எடுக்க வந்திட்டீரே. சாவன்னா இம்புட்டுத்தான கெட்டிக் காரத்தனம். உம்ம கிம்பிரியம் இவளவுக்குத்தானா. வெங்கிடுவின் புத்திசாலித்தனம் சாவன்னாவைக் குத்திக்குத்தி புகை கிளம்பியது. சாவன்னா திண்டு முழுங்குன மாதிரி திணறினார். ‘என்ன சொன்ன... என்ன சொன்ன.. எம்பேர்ல என்னப்பா இருக்கு. எம்மனசு கலங்கமில்ல. பால்போல இருக்கு. நிலாப்போல வெளிச்சம் அடிக்கி. கோமணத்துணிய ஏத்தி ஏத்திக்கட்டிக்கிட்டு நிக்காம்பாரு சமுசாரி. முகத்தில அருள் இல்ல. சமுசாரி முதுகுல கல்வச்ச மாதிரி இருக்கு. மனசு ஒத்துக்கிரலை. என் திரேகம் நடுங்குது. எல்லாருமா சேந்து அவன் மேல பாரத்தை ஏத்திட்டிங்க சாமிநாயக்கன் மனசு லொங்குது. சமுசாரிய பொதிமாடா போட்டு வசக்கி அடிக்கிது நாடு. தாயோளி செம்பிரி ஆட்டும் பெறவிநாடு... நாடு'... - வாக்கு அனல் அடித்தது. சாமிநாயக்கர் உருண்டு உருண்டு சிரித்தார். இடிவிழுந்த மாதிரி தரை நடுங்கியது. வேகவேகமாய் கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு போனார். தெட்சிணாமூர்த்தித் தெரு வழியாக கப்பக்கால்களைச் சரித்து சரித்து நடந்து போய்க் கொண்டிருந்தார். பாதை மறித்தது. சாமிநாயக்கரின் கைத்தடி என்ன என்ன, என்று சத்தம் போட்டது. கைத்தடி சத்தம் நூறு நூறு கேள்விகளாய்ச் சிதறியது. - தண்டவாளங்களில் வெயில் முறுகிக் கனகனக்க தண்டவாளங் களைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தார் சாமிநாயக்கர். 35