பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருப்:- தூக்கமா? ஏதுடா தூக்கம்... ஒரேயடியாத் துரங்கினாத்தான் உண்டு இவன் ஏன்டா அளுவறான்? சின்னான்:- எதுத்தவூட்டுல சாப்பிட்டுப் போட்ட எச்சல் எலையை எடுத்து நக்கிட்டு இருக்கான். தூக்கி எறிடான்னா கேக்காம கொண்டு வந்திருக்கான் பாரு (அடித்துப் பிடுங்கி எறிகிறான்.) கருப்:- நம்மளோட இல்லாத கொடுமைக்கி அதுகள ஏன்டா அடிச்சுக் கொல்றே? ஏன்டா சின்னா இன்னிக்காவது ஏதாவது வேலை... கூலி... கெடச்சுதா? சின்னான்:- வேலை எங்க மாமா கெடைக்கப் போகுது? படிச்சுப்பட்டம் வாங்கினவுங்களுக்கே வேலைகெடைக்காத இந்தக் காலத்துல எனக்குமட்டும் வேலை அவ்வளவு சுலபமாவா கெடைக்கப் போகுது?... பாழாப்போன இந்த மழையும் விட்ட பாடில்லே!.... மூட்டை துரக்கப் போகலாமின்னா வழக்கமா மூட்டை தூக்கறவுங்களுக்குப் போட்டியா நான் வந்துடறேன்னு என்னை வெரட்டறாங்க...! இந்தா இந்த ரொட்டியைப் புள்ளைங் களுக்கு குடு. (இளைஞன் வயிற்றுவலியால்துடிக்கிறான்) சின்னான்:- என்ன மாமா இதுவேறே புதுசா! கருப்:- காலையிலேருந்து வயித்து வலின்னு துடிக்கிறான். நானும் என்னவோ பண்ணிப்பாத்துட்டேன். ஒண்ணுக்கும் சரியாகல்லே! காலையிலேருந்து இந்தப் புள்ளைங்க வேறே பசி, பசின்னு துடிக்குதுங்க, ஒருவளியா அதுகள சமாதானம் பண்ணித்துங்க வைக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சி! டேய்ராசா பசியா இருந்தாலும் இருக்கும்! இதைக்கொஞ்சம் சாப்பிட்டு பாருடா! (ரொட்டியை எடுத்துக் கொடுக்க சாப்பிட்டுப் பார்த்து விட்டு வாந்தி எடுக்கிறான். மற்ற குழந்தைகள்விழித்துக்கொண்டு ரொட்டிக்காகப் போட்டி போட்டுக்கொண்டு போட்டியிடுகின்றன) - இளைஞன். தாத்தா வலி உயிர் போகுது ஒரேயடியா உயிர் போயிட்டாலும் பரவாயில்லே! ஒங்களுக்கு ஒருபாரமாவது கொறையும்! - - 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/42&oldid=463947" இலிருந்து மீள்விக்கப்பட்டது