பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சின்னான்:- இப்ப இந்த ராத்திரியிலே என்ன மாமா செய்யறது. எப்பவும் இவ்வளவு மோசமா இருந்தது இல்லியே! கருப்:- டவுன்லே ஆஸ்பத்திரிக்கிக் கூட்டிக்கிட்டுப் போகலாமா? - சின்னான்:- ஆசுப்பத்திரிக்கா வயித்துப் பொளப்பே பெரிசா இருக்கறப்போ, ஆசுப்பத்திரிக்கி எங்க மாமா கூட்டிக்கிட்டுப் போறது? அதுக்குப் பணம் வேணுமே! கருப்:- அதுக்குன்னு...? இவன துடிக்கத் துடிக்க இப்பிடியே விட்டுட முடியுமா? தாலிய அடமானம் வெச்சாவது பாக்க வேண்டியதுதான். தாலி கூட இல்லியே! (கருப்பண்ணன் அழுகிறான்.) - சின்னான்:- தாலியத்தான் அடமானம் வைக்கனும் அஞ்சலை ஞாபகமா அவளோட தாலி எங்கிட்ட இருக்கு. அதை அடமானம் வெச்சு பணம் வாங்கிட்டு வரேன். மெதுவா ஒரு கை புடிங்க கூட்டிக்கிட்டுப் போகலாம். முத்து:- எங்கே தாத்தா.... நானும் வரேன் தாத்தா! கருப்:- டேய் போறபோது எங்கே போறேன்னு கேக்கக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். அண்ணனுக்கு உடம்பு சரியில்லே ஆசுப்பத்திரிக்கிக் கூட்டிக்கிட்டுப் போறோம்! நீ தம்பி தங்கச்சிகளைப் பாத்துக்கிட்டு ஆட்டுல இருக்கியா? முத்து:- ஆசுப்பத்திரிக்கி நானும் வரேன் தாத்தா கருப்:- நீ எதுக்குடா ஆசுபத்திரிக்கெல்லாம் வரக் கூடாது. வந்தா ஊசி போட்டுடுவாங்க! . முத்து:- போ! தாத்தா பொய் சொல்ற நீ இங்கதான் சாப்பிட ஒண்ணுங் குடுக்க மாட்டேங்கறே ஆசுப்பத்திரியிலே ரொட்டி, பாலெல்லாம் குடுப்பாங்களாமே!.... (கருப்பண்ணன் சிறுவனை அணைத்துக்கொண்டு அழுகிறான்) பின்குரல்: (பெரிய 哆 சிரிப்புடன்) தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் மகாகவிபாரதி.... இங்கு தனி ஒருவனுக்கில்லை. ஒரு ஜகத்திற்கே உணவில்லை என்ற நிலை உருவாகி இருக்கிற்து. அப்படியென்றால் 42