பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாரை அழிப்பது? தனி ஒருவனையா? அல்லது ஜகத்தினையா? "கரீபி ஹட்டாவ்' என்று முழக்கமிட்டு விட்டு ஒழிக்கப்போவது ஏழ்மையையா அல்லது ஏழைகளையா? (ஒளிமங்குகிறது. இருட்டு) காட்சி 2 (ஆஸ்பத்திரி. வியாபாரி ஒருவர் வருகிறார். எதிரில்வார்டுபாய் வருகிறான்) வியாபாரி:- ஏம்பா தம்பி! நல்லா இருக்கியா? - வார்டுபாய்:- யாரை, யாரு என்ன கேள்விகேக்றதுன்னு வெவஸ்தையே இல்லாம போயிடிச்சி!...ம்.... செட்டியாரே! நல்லா இருந்தாலும், இல்லேன்னாலும் நாங்கமட்டும் இங்கதான் இருப்போம்....! ஆமா! நீங்க எப்பிடி? வியாபாரி:- (உடனே ஞாபகம் வந்தவராக) தம்பி.... அந்த வயித்து வலி போகவே மாட்டேங்குது. டாக்டர் இருக்காரா? வார்டுபாய்: அவரா?... அவர் போயிட்டாரே! வியாபாரி:- அய்யய்யோ! போயிட்டாரா எனக்கு முன்னால அவரே போயிட்டாரே! (அழுகை, ஒரே கூச்சல்) (நர்ஸ் வருகிறாள்வார்டுபாயிடம்) நர்ஸ்: வார்டுபாய் இது என்னய்யா கூச்சல் இது என்ன ஆஸ்பத்திரியா இல்ல சந்தைக் கடையா?... ஒ செட்டியாரா...! ஏன்யா இப்பிடிக் கத்தறீங்க? i. வியாபாரி:- நர்சம்மா! நீங்க கூட இருக்கீங்க... என் வயித்துவலி இருக்கு... அவரு போயிட்டாராமே? நர்ஸ்:- யாருய்யா போயிட்டா? எதுக்குய்யா ஒப்பாரி வெக்கறே? வியாபாரி:- அதான்.டாக்டரு.அவரு செத்துப் போயிட் |_m'Iff7up/T9 வார்டுபாய்:- யோவ் கிராக்கி இதுயாருய்யா! டாக்டரு 龛

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/44&oldid=463950" இலிருந்து மீள்விக்கப்பட்டது