பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாத்துக்கிட்டே இருக்கேன். நீங்கபாட்டுக்கு பேசிக்கிட்டே போlங்களே? ஒரு பொட்டுமருந்து குடுக்காம இவன இப்பிடியே கத்திக் கத்தி சாக அடிச்சுப்பிட்டு இப்பத் துக்கு தூக்குங்கறிங்களே! து... நீங்கள்ளாம் மனுசங்க தானா? ஒங்களுக்கெல்லாம் மனுசத் தன்மையே இல்லாம போயிடிச்சா அட! ஒருத்தரைக் காப்பாத்தறதும், இல்லாததும் நம்பகையிலே இல்லே! இருந்தாலும் இங்க கொண்டு வந்தா காப்பாத்த ஏதாவது முயற்சியாவது செய்வீங்கங்கற நம்பிக்கையினாலே தானேடா காசை காசுன்னு பாக்காம, குடிக்கக் காசு கூட இல்லாத நெலையிலே பொண்டாட்டி தாலியை வித்து இங்க கொண்டு வந்தோம் இப்பிடி ஒருபொட்டு மருந்து குடுக்காம சாக அடிச்சுப் பிட்டு செத்ததும் தூக்குதுக்குங்கறிங் களே, நீங்கள்ளாம் மனுசங்க தானா? து.... (அழுகிறான். கூட்டம் கூடுகிறது) அரசு:- (வார்டுபாயிடம்) ஏம்பா? என்ன ஆச்சு? வார்டுபாய்:- (அலட்சியமாக) அட இந்தக் கெளவனோட பேரன் செத்துப்பூட்டான்யா அதுக்குத்தான் இந்தக் கெளவன் என்னமோ இன்னிக்கித்தான் புதுசாச் சாவைப் பாக்கற மாதிரி கத்திக் கூச்சல் போடறான்யா! <9s安:一 என்னது? செத்துப்போயிட்டானா?... அதெ எவ்வளவு அலட்சியமாச் சொல்றான் பாத்திங்களாய் யா? இந்த ஆஸ்பத்ரிக்காரங்க எல்லாருமே இப்பிடித்தான். இவனுங்களுக்கு மனுசஉசுறான்னாமசிருக்குச்சமானம்... எதுக்கெடுத்தாலும் லஞ்சம்! எங்கபோனாலும் ஊழல். இப்பிடியே போனா ஊருல மழை எப்பிடியா பேயும்? . வார்டுபாய்:- ஆமா இவுஹ பெரிய்ய ஒழுங்கு பொறுப்பை யும் லஞ்சத்தையும் பத்தி நீ பேச வந்துட்டியா? அய்யா நீங்க எல்லாரும் இவரோட யோக்யதையும் கொஞ்சம் கேளுங்க. ரெண்டு வருசத்துக்கு முன்னால தணிகாசலம், தணிகாசலம்னு ஒருத்தர் ஒங்க ஆபீஸிலே ருந்து ரிட்டயர் ஆனாரே, நெனவு இருக்கா நாப்பது வருசம் ஒடாஒழைச்சு ரிட்டயர் ஆனதுக்கப்பறம் பென்சன் பணத்துக்கு நடிையா நடந்தாரு முழுசாச்சம்பளம் வாங்கற போதே காலம் தள்ளமுடியாத இந்தக் காலத்துல, பென்சன் பணமும் கெடைக்காத, அந்த மனுசன் என்னய்யாபண்ணுவான்? இனிமே என் ஆயிசுல பென்சன் பணத்தை வாங்க முடியாது, இப்பிடி 61