பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாடுகிறார். அந்த நொடியில், படம் பார்த்துக் கொண்டிருந்த அவனுக்குப் பட்டென்று ஒரு உண்மை உறைத்தது. அவளும் தன் காதலனைப் பிரிந்து திருப்தியாகவும், சந்தோஷமாகவும் இருந்து விட முடியாது. பெண்களுக்கேயுரிய பிரசித்தி பெற்ற வீம்பினால் விலகியிருந்தாலும், தன்னையே வருத்திக் கொண்டும், துன்புறுத்திக் கொண்டும், இறகினும் மெல்லிய அசைவுக்குக்காத்திருந்து காதலனுடன் இணைவார்கள். அவன் ஒரு முடிவுக்கு வந்தான். இடைவேளையின்போது அவள் அப்பா முதலில் எழுந்து போக, அவள் ஏதாவது வாங்கும் பொருட்டுக் கூட்டத்துடன் சேர்ந்து கடை நோக்கி நடந்தாள். அவள் அறிய அருகே அவனும் நடந்தான். வாசல் பக்கம் கூட்டமாயிருக்க அந்தக் கூட்டம் தந்த மறைவில் மெதுவாய் அவள் கையைத் தொட்டான். பட்டெனத் திரும்பி அவனை ஒரு வினாடி முறைத்து யூ ராஸ்கல் என்றாள். கற்றியிருந்த வர்களில் ஒருவர் என்ன மிஸ்?" என்று கேட்க, ஒருவன் அவன் சட்டையைப் பிடிக்க, இதைக் கவனித்த நண்பர்கள் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க, அவன் மட்டும் தியேட்டரை விட்டு வெளியே வந்து நடந்தான். இரவில் தனிமையில் நடப்பது எவ்வளவு இனிமையானது. வாழ்க்கை முழுதும் இப்படியே நடந்து கொண்டிருக்கலாம். அவன் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். அவன் ஒவ்வொன்றாய்க் கோர்த்து அவள் பெயர் எழுதும் நட்சத்திரக் கூட்டம் சிரித்தது. எல்லா மேகங்களும் ஒரே திசையில் பறந்து கொண்டிருக்க, அதிசயமாய் எதிர்த்திசையில் ஒரே ஒரு மேக்ம்மட்டும் வர, உற்றுப்பார்த்தான்; இரவுப்பறவைகள். பறவைகளே, பறவைகளே ஆசீர்வதிக்கப்பட்ட பிறவிகளே! என்னையும் அழைத்துச் செல்லுங்கள். ஏன் என்று கேட்கமாட்டேன், எங்கே யென்று கேட்கம்ாட்டேன். உங்கள் சிறகுகள் அபூர்வமான வரம். அந்த சிறகைப் போன்ற மெல்லிய வாழ்க்கை வேண்டும். வானத்தில் மறுகோடியில் அவை மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான். அவனது இரவுகள் இப்படிக்கழிந்து கொண்டிருந்தன. பகலில் கல்லூரி. மாலையில் அவளுடன் இணைந்து சந்தோஷமாக இருந்த இடங்களுக்கு அவன் மட்டும் தனிமைப்பயணம். அந்த இடங்களில் அவளுடன் முன்பு உட்கார்ந்திருந்த அதே இடத்திலேயே உட்கார்ந்து, அன்று அவர்கள் பேசியதை, சிரித்ததை நடந்து கொண்டதை மனதில் மறுபடியும் நடத்திப் பார்ப்பான். 93