பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சார்ல் போதலேர் - (1821-67) முருகுசுந்தரம் எட்கார் ஆலன்போ என்ற அமெரிக்க எழுத்தாளரின் படைப்பின் மீது போதலேருக்கு அளவு கடந்த ஈடுபாடு உண்டு. இலக்கியத் துறையில் அவரைத் தம் குருவாகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்டார் போதலேர். அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை; அவருடைய பழக்கங்களையும் ஏற்றுக் கொண்டார். ஆலன்போ ஓர் அபின் பிரியர்; போதலேர் கஞ்சாப் பிரியர். அபினும் கஞ்சாவும், பயன்படுத்துபவரைத் துக்கத்தில் ஆழ்த்துவ தில்லை; அவர்கள் உள்ளத்தில் ஒருவிதக் கிளர்ச்சியை ஏற்படுத்தி, விரும்பி ஏற்றுக் கொண்ட ஒரு கனவு நிலைக்கு அவர்களை ஆட்படுத்துகின்றன. அவற்றைப் பயன் படுத்தியவுடன், அவர்கள் உள்ளம் எந்தப் போக்கில் பயணம் செய்ய விரும்புகிறதோ, அந்தப் போக்கிற்கு அவர்களை எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் செலுத்துகின்றன. - கஞ்சா மயக்கம் வழங்கும் குழப்பமான அற்புதம் பற்றிப் போதலேர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்: "கஞ்சாப் போதையின் துவக்கத்தில், வழக்கத்திற்கு மாறான வண்ணத்தின் ஆதிக்கம் நமக்குப் புலப்படும். கண்ணைப் பறிக்கும் ஒளியுடம்போடு காட்சி தரும் மோகினிப் பெண்கள், நீலவானை விடத் தெளிவான - ஆழமான விழிகளால் நம்மை உற்றுப் பார்ப்பார் கள். அப்போது ஏற்படும் இனம் புரியாத rண நேர மன நிலைகளில் நம் வாழ்க்கையின் ஆழ அகலங்களும், நெளிவு சுளிவுகளும், அற்புதங்களும் நம் கண் முன் பளிச்சிடும். நம் கண்ணுக்கு முதன் முதலில் எந்தப் பொருள் தென்படுகிறதோ, அதுவே நம் அறிவை நடத்திச் செல்லும் குறியீடாக அமையும். தெளிந்த நீர் நிலைகளும், நிலைக் கண்ணாடிகளும் கனவுலகத்தை நமக்குத் திறந்து விடும்: 96