பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நடுங்கும் விரலால் பிரித்தான். அன்புள்ள என்றெல்லாம் துவங்காது மொட்டையாய் இருந்தது. "உங்கள் நினைவை அறவே அழித்து விட்டாலும், நீங்கள் பரிசு தந்த பேனா ஒன்று தங்கி முள்ளாய் உறுத்திக் கொண்டிருக்கிறது. நாளை, வழக்கமான இடத்தில், நேரத்தில் வந்து பேனாவை வாங்கிச் செல்லுங்கள். அவனுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. கடிதத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். சட்டென அவனுள் ஏதோ பொறி தட்டியது. எல்லாம் வெட்ட வெளிச்சமானது. புரிந்து போனது. அவன் அவள் குறிப்பிட்ட இடத்தில் காத்து நிற்பான். அவள் வேண்டுமென்றே தாமதமாய் வருவாள். வந்தவுடன், பேசாமல் அந்தப் பேனாவை நீட்டுவாள். அவன் கைகட்டி மெளனமாய் நிற்பான். அவள் கோபமாய், 'இத திருப்பி வாங்கிக்கங்க, உங்கள்.ட்ட பேசவே பிடிக்கலை' என்பாள். அதற்கும் அவன் மெளனமா நிற்பான். 'ச்சீ' என்பாள். 'உங்கள பார்க்கவே பிடிக்கலை' என்பாள். நாலைந்து வினாடிக்கு ஒருமுறை இமையை இமைத்துக் கொண்டு அவன் அமைதியாய் அவளைப் பார்த்தவாறே இருப்பான். 'உங்களுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா... ஐயோ, நான் சரியான பைத்தியம். திரும்பத் திரும்ப பழசையே நெனைச்சிட்டு, பேசிட்டு... சீக்கிரம் இத வாங்கிக்கங்க, நான் போகணும்' என்பாள். அவன் இவ்வளவு நேரம் பேசாமலிருந்ததால் கரகரப்பான குரலைச் சரிசெய்து 'வாங்கிக்கறேன், ஆனா இவ்வளவு ஆனதக்கப்புறம் எனக்கும் நீ எழுதின கடிதம், மற்ற பரிசு எல்லாத்தையும் கொடுத்திட னும்னு தோணுது. பைல எல்லாத்தையும் கொண்டு வந்திருக்கேன். ஆனா தெருவுல இதெல்லாம் வேண்டாம்...எதிர்ப்புறம் கைகாட்டி அதோ நாம முதல் தடவையா சேர்ந்துபோன ஹோட்டலுக்குப் போவோம். எல்லாத்தையும் அங்க முடிச்சுப்போம்' என்பான். அவள் வேறுவழியில்லாமல் வருவதுபோல் வருவாள். ஏ.ஸி. அறை தனிமையிலும் பக்கத்தில் உட்காராமல் எதிர் இருக்கையில் அமர்வாள். உடனே பேனாவை எடுத்து நீட்டுவாள். அவன், அவள் கையையும் சேர்த்துப் பிடிப்பான். மெளனமாய்த் தலைகுனிவாள். கையைப் பிடித்தவாறே அவள் பக்கத்தில் வந்து உட்காருவான். 'இப்போ சொல்லு பார்க்கலாம், ராஸ்கல்னு என்பான். பற்றியிருக்கும் அவன் கையில் முதல் கண்ணிர்த்துளி விழும். சரி, சரி அழாதே, இனிமே சண்டை போடாம சந்தோஷமா இருப்போம்" என்பான். அவள் அவனைப் பார்த்து அழுகையினூடே சிரிப்பாள். A.