பக்கம்:சுயம்வரம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

51

கொல்ல நினைக்கிறான்!” என்றாள் அருணா, அதற்குள் தன்னை ஒருவாறு சமாளித்துக்கொண்டு.

“ம், பாழும் உண்மை எங்கே, எப்பொழுது சீக்கிரம் வென்றது, இங்கே வெல்ல? நான் வருகிறேன்!” என்று காந்திஜியின் அடிச் சுவட்டை அப்படியே பின்பற்றி நடப்பது போல் நடந்தான் ஆனந்தன்.


கலியாணத்திற்குப் பிறகு ஒர் ஆணோ, பெண்ணோ
வேறு யாரையும் காதலிக்கக் கூடாதா?
இது என்ன அநியாயம்?...

7


ப்கோர்ஸ் ஆனந்த’னின் தலை மறையும் வரை அவனையே பார்த்துக்கொண்டிருந்த மதனா, “போர்பந்தரிலோ, வேறு எங்கேயோ காந்திமகானின் மறு பிறவியாகப் பிறந்து, காஷ்மீரிலோ, வியட்நாமிலோ ‘சமாதான யாத்திரை’ செய்து கொண்டிருக்க வேண்டியவர், தவறிப் போய் இங்கே பிறந்து, ‘காதல் யாத்திரை’ செய்துகொண்டிருக்கிறார்!” என்றாள் அருணாவின் பக்கம் திரும்பி.

“யாரைச் சொல்கிறாய்?” என்றாள் அவள் தெரிந்தும் தெரியாதவளைப்போல.

“உண்மைக்கென்றே பிறந்து, உண்மைக்கென்றே உயிர் வாழும் அந்த உத்தமனைத்தான்!”

“எந்த உத்தமனை?”

“அவன்தாண்டி, அந்த ஆனந்தனை”

“ஐயையோ! அவரையா சொல்கிறாய், அப்படி? இன்று சாயந்திரம்கூட, ‘பாலிடால், பாலிடால்’ என்று ஏதோ ஒரு பூச்சி மருந்து இருக்காமே, அது எங்கேயாவது கொஞ்சம் கிடைக்குமா என்று அவர் யார் யாரையோ ‘கெஞ்சு, கெஞ்சு’ என்று கெஞ்சிக் கொண்டிருந்தாரே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/54&oldid=1385118" இலிருந்து மீள்விக்கப்பட்டது