பக்கம்:சுயம்வரம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

53


நீலாவுடன் சினிமாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறான். என்னைக் கண்டதும் திருடனைத் தேள் கொட்டியதுபோல் ஆகிவிட்டது அவனுக்கு. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, 'போ, போ! உன்னை நம்பித்தானே மதனாவை அங்கே அனுப்பி வைத்தேன்? அங்கே நீ அவளைத் தனியாக விட்டுவிட்டு இங்கே வந்து நிற்கிறாயே! போ, போ! இன்றிரவு மட்டும் நீ அவளுக்குக் கொஞ்சம் துணையாயிரு; நாளைக் காலையில் நான் வந்து அழைத்துக்கொண்டு போய் விடுகிறேன்!" என்றான் அவன், உனக்காக அப்படியே உருகி விடுபவனைப் போல. என்ன இருந்தாலும் ஒரே இடத்தில் வேலை செய்பவர்களல்லவா நாம்? அவன் அப்படிக் கெஞ்சும்போது, எப்படி மாட்டேன் என்கிறது? 'சரி' என்று வந்துவிட்டேன்!"

"நல்ல வேளை, நீ வந்திருக்காவிட்டால் அந்த ஆனந்தன் இன்னும்கூட இந்த இடத்தை விட்டுப் போயிருக்க மாட்டான்"

"இங்கே நீ இப்படிச் சொல்கிறாய்; அங்கே ஆனந்தன் என்னிடம் என்ன சொல்லிவிட்டு வந்தார், தெரியுமா? 'பாவி, இன்று சாயந்திரம் நீலாவுடன் தான் சினிமாவுக்குப் போகப் போவது ஏற்கெனவே தெரிந்திருந்தும், 'மாலை ஐந்து மணிக்கு நான் விடுதிக்கு வருகிறேன்' என்று அவன் மதனாவுக்கு எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தானாம். அங்கே அவள் அவனை எதிர்பார்த்து எதிர்பார்த்து எப்படி ஏங்குகிறாளோ, என்னவோ? நானாவது போய் அவளைப் பார்க்கிறேன்' என்று துடியாய்த் துடித்துக்கொண்டு வந்தார்!"

"ஆமாம், அவர் எனக்கு எழுதிய கடிதம் அவனுக்கு எப்படித் தெரிந்தது?"

"எல்லாம் அந்த மாதவன் சொல்லித்தான் தெரிந்திருக்கிறது! உன்னைப்பற்றி அவன் எதைத்தான் இதுவரை அவரிடம் சொல்லாமல் இருந்திருக்கிறான்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/56&oldid=1384673" இலிருந்து மீள்விக்கப்பட்டது