பக்கம்:சுயம்வரம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்


“வேறு எங்கே நின்று அழப் போகிறாள்? நீ அனுப்பி வைத்தாயே பெண்கள் விடுதிக்கு, அந்த விடுதிக்கு வெளியே நின்றுதான் அழுதுகொண்டிருக்கிறாள்!” என்றான் ஆனந்தன்.

“உண்மையாகவா?”

“போயும் போயும் ஆண்களிடம் பொய் சொல்லி எனக்கென்னடா, ஆகப் போகிறது? ஏன். அருணா உன்னிடம் வேறு விதமாக ஏதாவது சொன்னாளா?” என்றான் ஆனந்தன் மீண்டும்.

“இல்லை, அவள் வேறு விதமாக என்னிடம் எதுவும் சொல்லவில்லை” என்று சொல்லிக்கொண்டே மாதவன் ஏதோ யோசித்தபடி, தலை முடியைக் கோதி விட்டுக் கொண்டே திரும்பினான்.

“டொய்ங், டொய்ங், டொய்ங்ங்ங்...” என்று வாயினால் படு உல்லாசமாக சோக கீதம் இசைத்துக்கொண்டே, “நான் வரேன், பிரதர்!” என்று அவன் முதுகில் ஒரு தட்டுத் தட்டி விட்டு, அங்கிருந்து நழுவினான் ஆனந்தன்.


போதாது, பால் உணர்ச்சியைப் போதிக்கத்
தெருவில் திரியும் நாய்களும், வீட்டுக்கு வீடு காணும்
சிட்டுக் குருவிகளும் போதவே போதாது!...

11


ந்த அருணா என்னை ஏன் இப்படி ஆட்டிப் படைக்கிறாள்? கலியாணத்துக்கு முன்னால்தான் அவள் தொல்லை யென்றால் பின்னாலுமல்லவா அது தன்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது!

வீட்டில், அலுவலகத்தில், வெளியில் - எங்கே இருந்தாலும் அவள் எனக்கு எதிரே வந்து நின்றுவிடுகிறாளே!

இதனால் நாலு பேர் நாலு விதமாகப் பேசுவதைத் தவிர அவள் வேறு என்னத்தைக் கண்டாள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/84&oldid=1385147" இலிருந்து மீள்விக்கப்பட்டது