பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கவிஞர் முருகு சுந்தரம் 4. திருத்தத்தில் வெற்றிபெற்றான் ஒட்டக் கூத்தன் தீர்ப்பளித்து வெற்றிபெற்றான் கரிகாற் சோழன் திருத்தத்தில் வெற்றிபெற்றான் ஆட்ட னத்தி நிதியளித்து வெற்றிபெற்றான் பாரி வள்ளல் வருத்தத்தில் வெற்றி பெற்றார் வடலூர் வள்ளல் வாளேந்தி வெற்றிபெற்றான் சேரலாதன் விருத்தத்தில் வெற்றிபெற்றான் கம்பன்; அந்த வெற்றியினை இவர்பெற்றார் என்னைப் போல! " விருத்தத்தில் கம்பனும் பாரதிதாசனும் பெற்ற வெற்றியைத் தாமும் பெற்றுவிட்டதாகச் சுரதா கூறுவது, அவரது ஆற்றலின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. சுரதாவின் பாடலில் அடுக்கடுக்காகத் தோன்றும் உவமை உருவகங்களும், கருத்துக்களின் சுமையும் நம்மைச்சுண்டியிழுக்கின்றன. பாரதிதாசனுடைய விருத்தத்தைப் படித்து விட்டுச் சில நேரங்களில் சுரதாவின் விருத்தத்தைப் படிக்கும்போது அழகான குடும்பப் பெண்ணைப் பார்த்து விட்டு அலங்காரத்தோடு வரும் திரைப்பட நடிகையைப் பார்ப்பது போன்ற உணர்ச்சியும் ஏற்படத்தான் செய்கிறது. தம்முடைய விருத்தம் எப்படிச் சுவையாகப் பிறப்பெடுக்கிறது என்பதைத் தாய்மையுணர்ச்சி யோடு ஒரிடத்தில் சுரதா வெளிப்படுத்தியுள்ளார்: