பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 சுரதா ஓர் ஒப்பாய்வு يوليو சுரதாவின் புலமை நுட்பம் வடமொழியில் இதைச் சமத்காரம்' என்பர். ஆங்கிலத்தில் wit என்று கூறுவர். கவிதையில் ஒரு கருத்தை வெளியிடும்போது, மிகவும் நுட்பமாகச் சிந்தித்துப் படிப்போர் வியக்கும்படி நயம்படக் கூறுவது சமத்காரம். இக்கலை கவிஞரின் கல்விப் பரப்பாலும், நுட்மான சிந்தனை ஆற்றலாலும் வெளிப்படும். கவிஞர் டி. எஸ்.எலியட் இதைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'பல்வேறு பட்ட சிதறிய பொருள்களைக் கவிஞன் தன் சிந்தனை ஆற்றலால் ஒற்றுமைப் படுத்திக் காட்டுவதே புலமைநுட்பம்" என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். ஆங்கிலக் கவிஞன் பைரன் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவன்; பெண்கள்மீது ஆதிக்கம் செலுத்தும் அழகு வாய்க்கப் பெற்றவன். படிக்கும் காலத்தில் கல்லூரியில் ஒரு கவிதைப் போட்டி நடைபெற்றது; பைரனும் அதில் கலந்துகொண்டான்.