பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா ஓர் ஒப்பாய்வு 125 ஆத்திரத்தை நேத்திரத்தில் நிறுத்தி, மன்னன் அவுரங்க சீப்.ஆங்கே விரைந்து வந்தான். பூத்தமலர் போன்றவளும் அவனும், அந்தப் போர்வேத்தன் வரக்கண்டு மனம் வெடித்தார்: சேர்த்தவுடல் பிரித்திட்டார்; செயலி ழந்தார்! சிற்றிடை யான், பக்கத்தில் இருந்த வெந்நீர்ப் பாத்திரத்தில் காதலனை மறைக்க லுற்றாள்; பாராளும் வேந்தனதைப் பார்த்து விட்டான். "ஏனிங்கே நிற்கின்றாய் தனியே? இந்த ஏனத்தில் இருப்பதென்ன?' என்று கேட்டான். 'ஏனத்தில் தண்ணிர்தான் இருக்கு தென்றாள். 'இருக்கட்டும், தண்ணிரை வெந்நீ ராக்கு! தானிங்கே குளித்தாக வேண்டும்; எங்கே நடக்கட்டும் விரைவாக வேலை' என்றான். சேனைமன்னன் இவ்விதமாய் உரைக்க, அந்தச் சிங்காரி, அம்புபட்ட மான்போல் ஆனாள். பாத்திரத்தைப் பார்த்தபடி அழுது கொண்டே பச்சைமயில் மெதுவாக நடந்தான்; மிக்க ஆத்திரத்தோ டவ்விடத்தில் நின்ற வேந்தன், 'அன்னநடை நடக்காதே! என்றான்.உப்பு நீர்த்திவலை விழிவழியே நிலத்தில் ஒட, நீரற்ற கொப்பரையின் அருகில் வந்து, 'பூத்தமலர் மீதுமொய்க்கும் வண்டே' என்றாள். புதுக்கவிஞன் பெருமூச்சு மட்டும் தந்தான்.