பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 சுரதா ஓர் ஒப்பாய்வு فيجي சுரதாவின் புதுமை விருப்பம் தாம் கூறும் எதையும், தமக்குமுன் எந்தக் கவிஞரும் கூறாத முறையில் புதுமையாகக் கூற வேண்டும் என்பதில் சுரதாவுக்கு விருப்பமதிகம். தாம் சொல்லும் கருத்துக்களைப் புதுமையாகச் சொல்வதோடு, வடிவங்களையும் புதுமையாகப் படைத்தார். கதைக்கவிதை, சொல்விளக்கம், நெய்த செய்திகள், வசனகவிதை, காவியக் கடிதங்கள், கவிதை முன்னுரைகள் இப்படிப்பல. முன்னுரைப் புரட்சி 1920ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் நாள் டாடா இயக்கத்தினர் ஸ்விட்சர்லாந்தின் தலைநகரான சூரிச் நகரில் ஓர் ஓவியக் கண்காட்சி நடத்தினர். இவர்கள் கடைப்பிடித்த கொள்கை டாடாயியம்(Dadaism)என்று அழைக்கப்பட்டது. கவிதை, நாடகம், இசை, ஓவியம் என்று ஒவ்வொரு துறையிலும் மரபு, சம்பிரதாயம், நாகரிகம் போன்ற மதிப்புகள் மீது தொடர்தாக்குதல் நடத்துவது டாடா இயக்கத்தினர் வேலை.