பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 கவிஞர் முருகு சுந்தரம் 4. கவிதை, பேசும்பாணி, நடை உடை பாவனை யாவற்றிலும் சுரதாவை நூற்றுக்கு நூறு பின் பற்றுபவர். பொதுவாகச் சொன்னால் நாவரசன் ஒரு 'சுரதாயிஸ்ட் (Suradhaist), சில சமயங்களில் சுரதா நன்னியூர் போய், நாவரசன் வீட்டில் அரசமரியாதை யோடு தங்குவது வழக்கம். 1982இல் பொங்கல் விழாக் கவியரங்கிற்குத் தலைமை தாங்குவதற்குக் கரூர் வந்திருந்தார் சுரதா. நன்னியூர் நாவரசனும், சுரதாவின் கவிதையன் பர்களும், கல்லூரிப் பேராசிரியர் சிலரும், சுரதா தங்கியிருந்த அறையில் கூடியிருந்தனர். சுரதாதமக்கே யுரிய பாணியில் சுவையாகவும் சுறுசுறுப்பாகவும் பேசிக்கொண்டிருந்தார். டில்லியில் மிகப் பெரிய பதவியில் இருப்பவரும், கவிஞருமான ஒரு பிரமுகரின் தம்பி ஒருவரும், அக் கூட்டத்தில் இருந்தார். அவர் ஓயாமல் தமது தமையனாரைப் பற்றியும், அவருடைய கவிதையைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். கேட்டுக் கேட்டுச் சுரதாவுக்கு அலுத்துப் போய் விட்டது. கடைசியில் எரிச்சலும் வந்துவிட்டது. 'என்னய்யா சுத்த முட்டாளா இருக்கிற, ஒயாம உங்கண்ணன் புகழையே பேசிக் கிட்டிருக்கிறயே! நீ என்ன சாதிச்சிருக்கிறே? என்று வெடுக்கெனக் கேட்டார் சுரதா. அந்த நண்பர் முகம் தொங்கிப் போயிற்று.